மூட்டு மூட்டாக வலி உயிர் போகிறதா..? மூட்டு வலிகளுக்கு நொடியில் தீர்வு கிடைக்கும் என்றால் நம்புவீர்களா.!? இதோ உங்களுக்காக…!!

புரட்சி வானொலியின் மருத்துவ குறிப்புகளில் அடுத்து மூட்டு வலிக்கான தீர்வினை பார்க்கப் போகின்றோம். மூட்டு வலி இன்றளவில் பள்ளி மாணவர்களையும் பாதிக்க ஆரம்பித்து விட்டது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர் கூட இடுப்பு வலி, முழங்கால் வலி, மூட்டு வலி என இருந்து விடுவார்கள்.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இதற்கான காரணம் கல்சியம் குறைப்பாடு தான். கல்சியம் குறைப்பாட்டை நீக்க முதலில் நாம் கல்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக பால், சிறிய வகை மீன், நெத்தலி கருவாடு, சோயா, அத்திப் பழம், ஆரஞ்சு, கேழ்வரகு அரிசியில் சமைக்கக் கூடிய அனைத்தும்,

பசளை கீரை போன்றவற்றை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால் கல்சியம் குறைப்பாடு நீங்கும்.
அதே போல் மூட்டு வலிக்கு இந்த மருத்துவத்தை செய்யுங்கள்..எருக்கம் இலை இது சாதாரணமாக எல்லா இடத்திலும் கிடைக்க கூடியது. இதனை வைத்து எப்படி மருத்துவம் செய்வது என பார்க்கலாம்:

4 அல்லது ஐந்து எருக்கம் இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். பாத்திரம் ஒன்றில் நீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். பின்பு இந்த இலைகளை போட்டு மூடி நன்றாக கொதிக்கும் வரை விடுங்கள். பின் துணி ஒன்றை எடுத்து இந்த நீரில் நனைத்து தாங்க கூடிய சூட்டில் ஒத்தடம் கொடுங்கள். இப்படி இரண்டு மூன்று தடவை செய்தாலே வலி பறந்துவிடும்..!