" "" "

பனிகால வெடிப்புகளால் அவஸ்த்தை படுகின்றீர்களா.? இதனை ஒருமுறை பயன்படுத்தினால் போதும் குணமாகிவிடும்.!!

இன்றைய அழகு குறிப்புகள் பகுதியில் ஆண் பெண் இருவருக்கும் தேவையான மிக முக்கியமான குறிப்பினை தான் பார்க்கப் போகிறோம். அதென்ன அப்படி முக்கியம் என கேட்காதீர்கள் இதை விட தொல்லை தரும் விடயம் இல்லவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பனிக்காலத்தில் கை கால்களில் ஒரு வெடிப்பு வரும் பாருங்கள் ஐயோ அதனை பார்ப்பவர்கள் எங்களிடம் கேட்கும் கேள்வி குளிக்கும் போது தேய்த்து குளிக்க மாட்டீர்களா ஏன் இப்படி இருக்கிறது என்பதாக தான் இருக்கும். ஆனால் நாம் எப்படி தேய்த்து குளித்தாலும் இந்த பனி பத்து அல்லது குளிர் காலத்தில் குளித்த பின் வரும் வெள்ளை பத்து இவை இரண்டும் போகாது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதற்காக தினமும் வெஸ்லீன் உடன் செல்பவர்கள் பலர் இருக்கின்றனர். இவ்வளவு ஏன் கஸ்ட பட வீட்டிலேயே இலகுவாக மருந்து செய்யலாமே..! இதற்கு தேவையானவை என்ன என பார்க்கலாம்.: ஆரஞ்ச் பாதி, விட்டமின் ஈ டப்லட் 3 . கற்றாலை ஜெல் சிறிதளவு. இப்போது செய்முறையை பார்க்கலாம்.

ஆரஞ்சை உரித்து கொட்டையை எடுத்து பாதியை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கற்றாலை ஜெல் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த ஜூஸுடன் விட்டமின் ஈ டாப்லெட்டை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். இப்போது ரெமடி தயார்.

இதனை குளிப்பதற்கு முன்பு கை கால் போன்ற பகுதிகளில் நன்றாக பூசி அரை மணி நேரம் விட்டு அதன் பின் குளியுங்கள்.வாரம் இரண்டு முறை இதனை செய்துவர வெடிப்புகள் வராது அதே நேரம் இயற்கை அழகுடன் கை கால்களும் இருக்கும்