" "" "

தனது சுயநலத்திற்காக அப்பாவி மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவன்.! பூந்தமல்லியை அதிர வைத்த சம்பவம்.!!

திருமணமாகி சில வருடங்களாகியும் மனைவிக்கு குழந்தை இல்லாததால் துடிக்க துடிக்க மனைவியை வெட்டிக் கொண்ட கணவன் தொடர்பான செய்திகள் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது.
பூந்தமல்லி, சுமித்ரா நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். 30 வயதான இவர் மாங்காட்டில் அரிசி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் குன்றத்தூரை சேர்ந்த கீர்த்தனா என்கிற 27 வயதான பெண்ணை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

பணம் நகை என ஏராளமான வரதட்சணை கொடுத்து கீர்த்தனாவை பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணமாகி 2 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் உண்மை முகம் வெளிவர தொடங்கியது. கீர்த்தனாவை கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்த பன்னீர்செல்வம் குழந்தை இல்லை என குத்திக் காட்ட ஆரம்பித்துள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

4 வருடங்கள் ஆன போதும் கீர்த்தனாவிற்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் தினமும் சண்டை போட ஆரம்பித்ததால் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் கீர்த்தனா. விவாகரத்து வேண்டும் என பன்னீர் செல்வம் கேட்ட நிலையில் கீர்த்தனா மறுத்துள்ளார். இதனால் கீர்த்தனா வீட்டிற்கு வந்த பன்னீர் செல்லம் பேசுவதற்காக மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் திடீரென கீர்த்தனா கதறும் சத்தம் கேட்க குடும்பத்தினர் ஓடிச் சென்றுள்ளனர். போய் பார்த்தபோது கழுத்து மட்டும் சில இடங்களில் கத்தியால் குத்தப் பட்ட நிலையில் கீர்த்தனா துடித்துக் கொண்டிருந்துள்ளார். உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்த போது அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

பன்னீர் செல்வத்தை கைது செய்து பொலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் மனைவி 4 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது பிடிக்கவில்லை என கூறியதுடன், விவாகரத்திற்கு சம்மதம் தரவில்லை, இதனால் தான் கொலை செய்தேன் என கூறியுள்ளார்.!!