போடு “ரகிட ரகிட” ரம்யா பாண்டியனின் தம்பி பரசு போட்ட பதிவு.!! ரம்யாவை வாழ்த்தும் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்களில் அதிகம் கலாய்க்கப் படுபவரும், அதிகம் பேசப் படுபவரும் ரம்யா பாண்டியன் தான். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நாளில் இருந்து இறுதி நாள் வரை சிறப்பாக விளையாடிய ரம்யா பாண்டியன் சிங்கப் பெண் என் பிக் பாஸால் புகழப் பட்டார்.
ரம்யா கடைசி மூன்றுக்குள் வரும் வாய்ப்பு இருந்தது, ஆனால் ஆரியை கலாய்த்தால் ஆரி ரசிகர்கள் விடுவார்களா அதனால் 4ம் இடம் பெற்று வெளியேறினார். வெளியே வந்த ரம்யாவிற்கு அவரது குடும்பம் மிகப் பெரிய வரவேற்பு கொடுத்தது. இந்த நிலையில் அக்காவின் வரவு பற்றி பேட்டி அளித்துள்ள பரசு, அக்கா மிக சிறப்பாக பிக் பாஸ் வீட்டில் விளையாடினாள்.
எங்களை பொறுத்த வரையில் அவள் தான் டைட்டில் வின்னர். குடும்பத்தினர் அனைவரும் அக்காவை பார்த்து வியந்தனர். அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை, மனதில் பட்டத்தை கூறினாள். யார் அவளை எதிர்த்தாலும் நேராகவே எதிர்த்தாள்.
அதனால் அக்காவை நினைத்தால் பெருமையாக உள்ளது. அதனால் தான் அக்காவிற்கு இத்தனை ஏற்பாடுகள் செய்தோம் அக்காவை 4ம் இடத்திற்கு எடுத்து வந்த அக்காவின் ரசிகர்களின் ஆசையை நாம் நிறைவேற்றி விட்டோம். வாழ்த்துக்கள் எங்கள் வீட்டின் முடிசூடா ராணி..என குறிப்பிட்டதுடன் போடு “ரகிட ரகிட” என குறிப்பிட்டுள்ளார்.!!