இன்றைய தினம் இலங்கையில் நடந்த கொடூர சம்பவம்..! 13 பேர் உயிரிழப்பு..!! 40 திற்கு அதிகமானோர் படுகாயம்…!!

இலங்கையில் இன்றைய தினம் இடம்பெற்ற விபத்தொன்றில் இது வரை 13 பேர் உயிரிழந்த தாக செய்திகள் வெளியாகி உள்ளது. பதுளை பசறை மடுல்சீமை பிரதான சாலையில் இந்த விபத்து ஏற்படுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பசறை பிரதான வீதில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று 150 அடி பள்ளத்தில் செங்குத்தாக விழுந்துள்ளது, இதில் பயணம் செய்த 60 திற்கு மேற்பட்ட பேர் பயணம் செய்த குறித்த பஸின் மேல் கூறை முற்றிலும் கழண்டு விழுந்ததுடன் பயணம் செய்த அனைவரும் காயமடைந்துள்ளனர்.

இதில் இது வரை சுமார் 13 பேர் மரணமடைந்த நிலையில் 40 திற்கு அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இருபது பேர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப் பட்ட நிலையில்

இவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பான விசாரணையை பொலீஸார் ஆரம்பித்துள்ளனர்..!!