" "" "

நான்கு தங்கைகளுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த அண்ணன்.! நன்றி கெட்டு தங்கை செய்த துரோகம்…காவல் துறையினரையும் கண் கலங்க வைத்த சம்பவம்.!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த அஞ்சுகிராமத்தைச் பவித்ரா என்ற நர்சிங் கல்லூரி மாணவி பெற்றோரை கதறி அழ வைத்துவிட்டு காதலனுடன் அசால்ட்டாக நடந்து சென்ற காட்சி காவல்துறையினரை மட்டும் இன்றி ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த பகுதியில் கூலி வேலை பார்த்து வந்த பவித்திராவின் தந்தை திடீரென வாத நோயால் பாதிக்கப் பட்டு வீட்டில் முடங்கிய நிலையில் பவித்ராவின் தாய் கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். 4 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையையும் வளர்க்க வேண்டும் என்று தாய் எடுத்த முடிவில் மகனும் சேர்ந்து கொண்டார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மூத்தது ஆண் என்பதால் தங்கைகளை படிக்க வைக்கும் பொறுப்பை ஏற்ற அண்ணன் 4 தங்கைகளையும் படிக்க வைத்து நல்ல நிலைக்கு ஆளாக்கிவிட்டே திருமணம் செய்வேன் என் கூறி படிக்க வைத்துள்ளார். மூத்த தங்கையான பவித்ரா நர்ஷிங் காலேஜ் சென்ற நிலையில் இன்னும் சில நாட்களில் படிப்பை முடிக்க இருந்தார்.

திடீரென இரவு முழுவதும் மகள் போனில் பேசுவதால் சந்தேக பட்ட தாய் மகளின் போனை பறித்துள்ளார். இதனால் கடுப்பான பவி திடீரென காணாமல் போக குடும்பத்தினர் பொலீஸில் புகார் கொடுத்தனர். இன்றைய தினம் தனது காதலனுடன் பொலீஸ் நிலையம் வந்த பவித்ரா நான் மேஜர், இவர் என் காதலர் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம் என கூறியுள்ளார்.

இதனை கேட்டு கதறி அழுத தாய் இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு கல்லூரி படிப்பை முடிச்சிடு, உனக்கு போன தாறோம், நீ பேசிக்கொண்டே இரு படிப்பு முடிய திருமணம் செய்து வைக்கிறோம் என கதறி அழுதுள்ளார். அ

த்துடன் உன்னால் அண்ணா 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறான், உன் படிப்புக்காக தான் எல்லாம் செய்கிறான், தங்கைகள் 4 பேருக்காக அவன் அவனது வாழ்க்கையை இழந்து வாழ்கிறான், அவனுக்காக சரி படிப்பை முடித்து திருமணம் செய் என கதறியதுடன் மகளின் கையை பிடித்த போது கையை தட்டிவிட்ட பவித்ரா காதலனுடன் சிரித்து பேசியபடி நின்ற போது ஓரமாக நின்று அவரது அண்ணா கண்ணீர் விட்டு. அழுதுள்ளார். இதனை பார்த்த அனைவரும் மனம் உடைந்து போயிள்ளனர்.!!