சாதாரணமாக நாம் நினைக்கும் பாப்பாளி பழத்தில் இத்தனை நோய் குணப்படுத்த முடியுமா. .? அதிசயம் ஆனால் உண்மை…!!

பப்பாசிப் பழத்தை பற்றி அறிந்திருக்கின்றீர்களா? பப்பாசி  உங்கள் உடலுக்கு எவ்வளவு  நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா? பப்பாசிப் பழமானது பல்வேறு வகையிலும் நம்முடைய உடலிற்குத் தேவையான ஆரோக்கியமான ஊட்டச் சத்துக்களை வழங்குகின்றது. அது தவிர ப்பாசி ஒரு சிறந்த அழகுசாதனப் பொருளுமாகும்.எனவே முதலில், பப்பாசிப் பழத்தில்  உள்ள  ஊட்டச்சத்து விவரங்களை பார்ப்போம்.
பப்பாசிப் பழமானது   கரோட்டின்கள் (லிகோபீன்) மற்றும் ஆக்ஸிஜனேற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாக இருக்கிறது,

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

பப்பாசிப் பழத்தை மருத்துவ தேவைகளுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக பார்க்கலாம்.
நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகின்றது.பப்பாசியானது பல நோயெதிர்ப்புச் சக்திகளை தன்னகத்தே கொண்டது. இது காயங்களை ஆற்றும் மருந்தாகவும் காணப்படுகின்றது. அத்தோடு கண்பார்வை தொடர்பான பிரச்சினைகளுக்கும் செரிமானப் பிரச்சினைகளுக்கும் இது தீர்வாகின்றது.

இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.பொதுவாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய்கள் மற்றும் கொட்டைகள் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகள் ஆரோக்கியத்திற்கு அத்தியாசிய ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்டிருக்கின்றன. பப்பாசியானது இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நிலைமைகள் துரிதமாக  வளரும் அபாயத்தை குறைக்கின்றது.

பப்பாசியின் மற்றுமொரு பயன்தான் காயங்களைக் குணப்படுத்தும் தன்மை.  பொதுவாக ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்றால் காயங்கள் பாதிக்கப்படும். இதற்குப் பப்பாசியானது தீர்வாகின்றது. பப்பாசி பாரம்பரியமாக பல்வேறு தோல் நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது, இதில் காயங்களும் அடங்கும்.

வயிற்றுப் பிரச்சினைகளுக்கு மருந்தாகும்.அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாசியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாசி. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.