“இவர்களும் பிக் பாஸ் வீட்டில் காதலித்து தான் திருமணம் செய்தார்கள்…லொஸ்லியாவின் காதலை மட்டும் ஏன் எதிர்க்கிறார் சேரப்பா” லொஸ்லியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல இயக்குனர்..!

பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியாவின் காதலை எதிர்த்த பலரும் தற்போது அவரது காதலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார். நேற்றைய தினம் வீட்டிற்குள் வந்த தந்தை மற்றும் தாய் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இவர்களின் காதலுக்கான ஆதரவு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பல நடிக நடிகைகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் வசந்த பாலன் அவர்களும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் காதல் வருவதற்கு எதுவும் தேவையில்லை ஆணும் பெண்ணும் போதும். லொஸ்லியாவின் காதல் ஆரம்பமான நொடியில் இருந்து ஏன் இங்கே வந்தாய் கேம் விளையாட தானே அதை மட்டும் செய் என அத்தனை பேரும் அறிவுரை கூறினார்கள்,

உயிர் போகும் இறுதி நொடியில் கூட பிடித்தவரை கண்டால் காதல் வரும் அப்படி இருக்க கேம் ஷோவுக்கு வந்து லொஸ்லியாவிற்கு காதல் வந்ததில் என்ன தப்பு? மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொகுப்பாளினி Pearle maaney அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த என்பவரை காதலித்து வெளியே வந்த பின் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இவர்கள் இருவரின் காதலும் அத்தனை அழகாக இருந்தது. அப்படி இருக்கையில் ஏன் சேரக் கூடாது என நினைக்கிறார்கள்.? குறிப்பாக சேரப்பா இந்த காதலை சேரவிடவே மாட்டார் என தெரிவித்துள்ளார்..!!