" "" "

அண்ணனின் காதலியை திருமணம் செய்த தம்பி.! மனமுடைந்த அண்ணன் செய்த செயல்..!

மதுரை மாவட்டம், பாலமேடு சல்லிகோடாங்கிபட்டி பகுதிதை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த பெரிய கருப்பன் 26 வயது, சின்ன கருப்பன் 24 வயது. இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள்.

இவர்களின் குடும்பத்தில் முறை பெண்கள் குறைவாக இருந்த நிலையில் பெரிய கருப்பனுக்கு 16 வயதான உறவுக்கார பெண் மீது காதல் வந்தது. காதலை பெற்றோரிடம் கூறிய பெரிய கருப்பன் திருமணத்திற்கு தயாராக இருந்த போது குறித்த இளம் பெண்ணோ சின்ன கருப்பனுடன் காதலில் விழுந்த பெண் சின்ன கருப்பனுடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த சம்பவம் அறிந்த பெரிய கருப்பன், தனது ஒரு தலை காதலும் உடைந்து போனது என நண்பர்களுடன் கூறிவிட்டு வீட்டுக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பெற்றோர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் இறுதி சடங்குகள் இடம்பெற்றுள்ளது,

தங்களால் பெரிய கருப்பன் தற்கொலை செய்துகொண்டதை அறிந்துகொண்ட ஓடிபோன தம்பதி விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர், இந்த நிலையில் ஜோடிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு தலை காதலால் அப்பாவி உயிர் பிரிந்தாலும், இப்படியான முட்டாள் தனங்களை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.!;