" "" "

ஜெயராஜ், பென்னிக்ஸ் போல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷால் அடித்துக் கொல்லப் பட்ட மகேந்திரன்..! சாத்தான் குளத்தில் நடந்த கொடூர கொலைகள்..!!

சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணம், கொலை வழக்காக பதியப் பட்டு விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. குற்றவாளிகளாக சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகள் 6 பேர் அடையாளம் காணப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகிறது. இந்த வாழ்க்கை சிபிசிஐடி எடுத்து விசாரித்து வருவதால் மக்கள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த நிலையில் சாத்தான்குளம் வியாபாரிகளை அடித்து கொலை செய்தது போலவே தனது மகனையும் அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்ததாக ஆதாரங்களுடன் தாய் ஒருவர் புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி சாத்தான்குளம் காவல் நிலையயத்திற்குட்பட்ட பேய்குளம் பகுதியில் வசித்து வரும் வடிவம்மாள் என்ற தாயொருவரே இவ்வாறு புகாரளித்துள்ளார்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை அடித்து கொடுமை படுத்திய சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் தனது மகனை விசாரணை எனும். பெயரில் அழைத்துச் சென்று அடித்து கொலை செய்ததாக தாயார் வடிவம்மாள் தெரிவித்துள்ளார். வெங்கடேஷ்வர புரத்தை சேர்ந்த ஜெயகுமார் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டார்.

இந்த கொலை வழக்கிற்கு சிறிதும் சம்மந்தம் இல்லாத சாத்தான்குளம் மக்கள் ரகு கணேஷின் கண்ணில் பட்டனர். இதன் போது வடிவம்மாளின் மூத்த மகன் துறையும் கொலையில் சம்மந்தப் பட்டிருப்பதாக கூறிய ரகு கணேஷ் வடிவம்மாளின் மகன் துரை யை தேடி வீட்டிற்கு வந்த போது துரை வெளியில் சென்றுள்ளார். இதனால் வீட்டில் இருந்த துரையின் தம்பி மகேந்திரனை மே 23 திகதி கைது செய்ததுடன் வீட்டில் வைத்தே அடித்து உதைத்து இழுத்துச் சென்றுள்ளனர்.

வீட்டுக்கு வந்த துரை தம்பி கைது செய்யப் பட்டது தெரிந்து உடனடியாக பொலீஸ் நிலையம் சென்றதுடன் தம்பியை விடுதலை செய்து விட்டு தன்னை கைது செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் மகேந்திரனை அடுத்த நாள் ரகு கணேஷ் விடுதலை செய்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வந்த மகேந்திரனால் நேராக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்துள்ளார்.

இதனால் ஜூன் மாதம் தூத்துக்குடி அரச மருத்துவ மனையில் சேர்ந்த போது மகேந்திரன் மரணமடைந்தார். அடித்து கொடுமை படுத்திய விடயங்களை வெளியே சொன்னால் பொலீஸில் இருக்கும் துறையை கொண்டு விடுவதாக ரகு கணேஷ் மிரட்டியதை தொடர்ந்து பிரேத பரிசோதனை கூட செய்யாமல் மகேந்திரனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மகேந்திரன், பென்னிக்ஸ், ஜெயராஜ் போல் ரகுகணேஷ் பலரது மரணத்திற்கு காரணமாக இருந்துள்ளார். அவர் விசாரித்த அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணை செய்தால் பல உண்மைகள் வெளியே வரும் என மக்கள் கூறுகின்றனர்..!!

Video Copyrights & Credits Owned by :Puthiyathalaimurai TV