" "" "

பிரித்தானியாவில் மாயமாகி உள்ள இந்திய இளம் யுவதி..! மீட்க உதவும் படி மக்களிடம் உதவி கோரியுள்ள பெற்றோர்…!!

பிரிதானியாவில் காணாமல் போய் உள்ள இந்திய யுவதி ஒருவரை கண்டுபிடிக்க உதவும் படி அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டுள்ளனர். பிரித்தானிய பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வரும் 23 வயதான பர்த்தீ கவுர் ப்ளாஹா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு லெய்டன்ஸ்டோன் வால்தம் வனப்பகுதி அருகே நடைபயிற்சிக்காக சென்ற போது காணாமல் போயுள்ளார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

புதன்கிழமை காலை 10. 30 மணியளவில் ப்ளாஹாவின் மொபைல் ஓப் செய்யப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ப்ளாஹா மொபைலை எடுத்து சென்றதாக பெற்றோர் நம்புகின்றனர். புதன் கிழமை நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் தேடிய போது அவரை காணவில்லை.

இதனால் பொலீஸில் அறிவித்தும் இதுவரை கிடைக்கவில்லை. எங்கே சென்றார் கடத்தப் பட்டாரா என்ற விபரம் தெரியாத நிலையில் பெற்றோர் மக்களின் உதவியை நாடியுள்ளனர். பட்டம் பெற்று ஏராளமான கனவுகளுடன் இருந்த ப்ளாஹா காதல் பிரச்சனைகளிலும் சிக்கவில்லை.

அதனால் என்னானது என தெரியாமல் உள்ளது என ப்ளாஹாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அறிய தரும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்…!!