" "" "

பறக்கும் விமானத்தில் நடுவானில் அசத்திய தமிழன்..! வைரலாகும் வீடியோவை பார்த்து குவியும் வாழ்த்துகள்..!!

தாய்மொழி தமிழாக இருந்தும், பேசப் போவது தமிழனுடன் என்பது தெரிந்தும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் பலரை கண்டிருப்போம். ஆங்கிலமே தெரியாதவர்களிடம் கூட தனக்கு ஆங்கிலம் தெரிந்ததை காட்டிக் கொள்வதற்காக பலர் ஆங்கிலத்தில் அலப்பறை செய்வதுண்டு ஆனால் தமிழர்கள் மட்டும் இன்றி அனைத்து மொழி பயணிகளும் பயணிக்கும் விமானம் ஒன்றில் சுமார் 16 ஆயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் போது தமிழ் மொழியில் விமானத்தில் அறிவிப்பு வெளியான விடயம் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது..

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

வட சென்னையை சேர்ந்தவர் பிரிய விக்னேஷ். இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சிறிய பெட்டிக் கடை, அம்மா ஆசிரியர். அரச பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு சிறு வயது கனவான பைலட் பயிற்சிக்கு செல்ல விரும்பினார். பணம் வேணுமே வேறு வழி இருந்த ஒரே காணியையும் அடகு வைத்து பைலட்டுக்கான பட்ட படிப்பை முடிக்க சென்றார்.

பணம் போதாது அதனால் காணியே விற்றாகி விட்டது. மிகப் பெரிய போராட்டத்தின் பின் உதவி பைலட்டாக பணிக்கு சேர்ந்தார் பிரிய விக்னேஷ். அதன் பின் வாழ்க்கை மாறத் தொடங்கிய நிலையில் தற்போது சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ விமானத்தில் கேப்டனாக இருக்கிறார். அண்மையில் பயணிகளுடன் மதுரை சென்ற விமானத்தில் அழகிய தமிழில் அறிவிப்பு வெளியானது அதில் ” தற்போது நாம் 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கின்றோம்.

நீங்கள் ரசிக்க விரும்பும் இடங்களில் ஒன்றான காவேரி ஆறு காவேரி பிரியும் இடத்தை காண முடியும், அதே போல் இவை பிரியும் இடத்தினை ஸ்ரீரங்கம் என அழைப்பார்கள், இங்கு ஸ்ரீரங்க நாதர் கோயில் விஷேட அம்சமாகும், என விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகியதை பிரபல நாளிதழ் பிரிய விக்னேஷிடம் பேசிய போது..இந்த விமானத்தில் பயணிப்பவர்களுக்கு தமிழ் தெரியும்.

இந்தியாவில் அனைத்து விமானங்களிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே அறிவிப்புகள் வெளியாகும் அதனால் தமிழில் அறிவிப்பு செய்ய விரும்பினேன். எனது குருவான சஞ்சீவ் பின்பற்றிய வழியில் நானும் செல்கிறேன். அவர் தான் ஒவ்வொரு இடத்தின் மீது செல்லும் போதும் அது பற்றிய உணர்வை உணர வைத்தார். என தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது..!!

Video Copyrights & Credits Owned by :IBC Tamil