" "" "

சாதிக்க ஆசை பட்ட இளம் பெண்ணை சாக வைத்த கணவர்..! இந்தியாவை அதிர வைத்த சம்பவம்..!!

இந்தியாவின் இளம் பெண் ஒருவரின் மர்ம மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் வாரணாசியை சேர்ந்தவர் அப்தப் . இவர் பூஜா படேல் என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். முதலில் முகமது வீட்டில் எதிர்ப்பு இருந்த போதும் பின் ஏற்றுக் கொண்டனர்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மாடலிங்கில் சாதிக்க விரும்பிய பூஜாவை அவரது மாமியார் தடுத்தார். மதம் மாறும் படி கட்டாய படுத்திய நிலையில் பூஜாவிற்கும் மாமியாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் குடி போதையில் வரும் மகனுக்கு மருமகள் பற்றி தவறாக கூறி சண்டையை ஏற்படுத்தினார். இதனால் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருந்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று இருவருக்கும் இடையில் சண்டை ஆரம்பித்த நிலையில் பூஜா உறங்க சென்றுவிட்டார். திடீரென நள்ளிரவில் பூஜாவின் அறையை அப்துல் கதறியபடி தட்டிய நிலையில் அயலவர்கள் ஓடி வந்து பார்த்த போது தூக்கில் தொங்கித நிலையில் பூஜா இருந்துள்ளார்.

உடனடியாக பூஜாவை வைத்தியசாலை கொண்டு சென்ற போது பூஜா ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பூஜாவின் பெற்றோர் பொலீஸில் புகார் அளித்துள்ளனர். அதில் பூஜா திருமணமாகி சில மாதங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருந்தாள்.

பின் தன்னை மாமியாருடன் சேர்ந்து கணவர் கொடுமை படுத்துவதாக கூறினார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் பூஜா சாக விரும்பவில்லை சாதிக்க விரும்பினாள் எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.! இந்த மரணம் குறித்து அயலவர்களும் சந்தேகம் வெளியிட்டதால் பூஜாவின் கணவரான அப்துல் கைது செய்யப் பட்டுள்ளார்..!?