google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

கடந்தல் கும்பலிடம் சிக்கிய நடிகை பூர்ணா..! திரைப்பட பாணியில் நடந்த சம்பவம்..!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல நடிகை பூர்ணா மிகப் பெரிய ஆபத்தில் இருந்து தப்பிய விடயம் தற்போது வைரலாகி வருகிறது. லாக் டவுன் காரணமாக டிக் டாக்கில் அதிக நேரம் செலவு செய்துள்ளார் நடிகை பூர்ணா இதன் போது அன்வர் என்ற நபர் பூர்ணாவிற்கு அறிமுகமாகி உள்ளார். இவர் தனக்கு துபாய் மற்றும் கேரளாவில் மிகப் பெரிய நகைக் கடைகள் உள்ளது என்று கூறியதுடன் பூர்ணாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இந்த நிலையில் பூர்ணா எந்த முடிவும் எனது குடும்பத்தினரின் முடிவு தான் என கூறியதுடன் அன்வரின் பெற்றோர் பூர்ணாவின் பெற்றோருடன் பேசுவதாக கூறியுள்ளனர். இதனால் இருவரின் பெற்றோரும் பேசிக் கொண்ட போது அன்வரின் குடும்பத்தினர் அன்பாகவும் மரியாதையாகவும் பேசியதை தொடர்ந்து வீட்டிற்கு பெண் பார்க்க வரும் படி கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு அன்வரின் குடும்பம் வந்த போது அதிர்ந்து போயுள்ளனர் பூர்ணாவின் குடும்பத்தினர். காரணம் வந்த அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சம்மந்தம் இல்லாமல் பேசியுள்ளனர். அத்துடன் அவர்களின் கார் ட்ரைவர் என இரண்டு இளைஞர்கள் அறிமுகப் படுத்தப் பட்டனர். இருவரும் தமிழ் இளைஞர்கள். அவர்கள் ட்ரைவர்கள் போல் இல்லாமல் இருந்ததால் சந்தேகம் ஏற்பட பூர்ணா குடும்பத்தினர் விசாரித்த போது அன்வர் கூறியது போல் வீடு கார் கடை என எதுவும் இருக்கவில்லை.

இதை தொடர்ந்து அன்வரிடம் இருந்து பூர்ணாவிற்கு கால் வந்துள்ளது. புதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிக்க போவதாக கூறியவர் 10 லட்சம் பணம் கேட்டுள்ளார். அன்வர் பற்றி தெரிந்துகொண்டதால் பூர்ணா முடியாது என்ற போது மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பூர்ணா உடனடியாக பொலீஸில் புகார் கொடுக்க பொலீஸாரின் தேடுதலில் அனைவரும் சிக்கி உள்ளனர்.

இவர்கள் மோசமான பணம் பறிக்கும் கும்பல் என விசாரணையில் தெரிய வந்ததுடன் அன்வர் என பேசிய நபரின் உண்மையான பெயர் ரபிக் என்றும் இவர் மொஹமட் அலி, ஜின்னா, போன்ற பெயர்களில் பெண்களை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது..இவர்களை கைது செய்த பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளார்.,!!