ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய சூப்பர் சிங்கர் பூவையார்..! வைரலாகும் புகைப்படம்..!!

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அனைவரும் அவர்களின் துறையில் பிரபலமாகி விடுவார்கள். குறிப்பாக சினிமா துறையில் சாதிக்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி இசை, நடிப்பு என பலர் அசத்திக் கொண்டிருக்க அண்மையில் இவர்களுடன் இணைந்தவர் சூப்பர் சிங்கர் பூவையார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கிராமத்தில் கானா பாடல் பாடிக்கொண்டிருந்த பூவையார் என்கிற நபீஸ் சங்கீதம் முறைப்படி கற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு பைனல் வரை சென்றார். அத்துடன் இவருக்கு பிகில் திரைப்படத்தில் பாடியதுடன் நடித்தார். அதனை தொடர்ந்து ஆதி தனது பாடல் ஆல்பம் அல்லது திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு பூவையாருக்கு கொடுப்பதாக கூறினார்.

இந்த நிலையில் மேடை நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என இவர் பிஸியாகி விட்டார். அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூட இது பற்றி பூவையார் கூறி இருந்தார். இப்படி இருக்கையில் அண்மையில் பூவையாரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் கோர்ட் அணிந்து அப்படியே மாறிவிட்டார். கானா பாடலில் கலக்கிய பூவையாரா இது என கேட்கும் அளவிற்கு மாறி இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது..!!