காதலித்து பல மாதகாலம் கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு 22 வயது யுவதி செய்த செயல்.! உயிர் ஆபத்தான நிலையில் இளைஞன்.!
பெண் ஒருவர் காதலித்து ஏமாற்றியதால் இளைஞர் ஒருவர் உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சேலத்தை சேர்ந்த பிரபு என்ற 25 வயது இளைஞனே இவ்வாறு உயிருக்கு போராடி வருகிறார். பிரபு திருச்சியை காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்த வைதேகி என்ற பெண் காவலரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய முடியாத அளவிற்கு காதலித்து வந்ததால் வைதேகிக்கு திருவாரூர் காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் கிடைத்த போது இருவரும் ஒன்றாகவே வாழ ஆரம்பித்தனர். வைதேகிக்கு திருவாரூரில் காவலர் குடியிருப்பில் இடம் கிடைத்ததால் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
அதன் பின் வைதேகியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவெடுத்த பிரபு வைதேகி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் வைதேகியின் குடும்பமே மகளை கொடுக்க முடியாது என கூறியுள்ளது. பல மாதங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்த பிரபு வைதேகியிடம் நான் பதிவு திருமணம் செய்துகொள்வோம் என கேட்டுள்ளார்.
ஆனால் அதனை மறுத்த வைதேகி “நீ வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்” என்னை மறந்துவிடு என கூறி விலக ஆரம்பித்துள்ளார். பிரபு எவ்வளவு கெஞ்சியும் வைதேகி மனம் மாறவில்லை. இதனால் மன்னார்குடி காவல் நிலையத்தில் பிரபு புகார் கொடுத்துள்ளார். புகாரில் என்னை காதலித்து என்னுடன் வாழ்ந்து தற்போது என்னை ஏமாற்றுகிறார் என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் பொலீஸார் புகாரை கண்டுகொள்ளாத நிலையில் நேற்றைய தினம் பிரபு விஷம் அருந்தியுள்ளார். இதனை தொடர்ந்து நண்பர்களால் காப்பாற்றப் பட்ட பிரபு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் ஆபத்தான் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.!