" "" "

திடீரென ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகர் பிரபுதேவா.! மணப்பெண் யார்.? இதோ முழு விபரம்.!!

கடந்த சில நாட்களாக வைரலாகி வரும் விடயங்களில் ஒன்று நடிகர் பிரபுதேவாவிற்கு திருமணம் என்பதாகும். ஆசியாவின் மைக்கேல் ஜாக்சன் என புகழப்படும் பிரபு தேவாவிற்கு திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் இருந்த நிலையில் நடிகை நயன்தாராவுடன் காதலில் விழுந்தார். மனைவியை விவாரத்து செய்தார்.

நயன்தாராவை திருமணம் செய்துகொள்வார் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.அதன் பிறகு பிரபு தேவா சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் சிகிச்சைக்கு சென்ற இடத்தில் சிகிச்சை அளித்த டாக்டரின் காதலில் விழுந்த பிரபுதேவா,

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அவரையே ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார். மணப்பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. படபிடிப்பின் போது ஏற்பட்ட வலிக்காக சமீபத்தில் பிரபுதேவா பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ள பீகார் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாகவும், சில தனிப்பட்ட விடயங்கள் காரணமாகவும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகின்றது. இருப்பினும் பிரபுதேவா இதனை உறுதிப்படுத்தவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்,