" "" "

பிரான்ஸ் அரசியலில் அசத்தும் இளம் தமிழ் யுவதி. குவியும் பாராட்டுகள், நீங்களும் பாராட்டலாமே..!!

உலகம் முழுவதும் தமிழர்கள் தங்கள் திறமையினால் ஆட்சி செய்ய ஆரம்பித்துள்ளனர். குறுகிய வட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து தங்களால் அனைத்தும் முடியும் என நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஆகாயத்திலும் பறக்க ஆரம்பித்து விட்டனர். தமிழ் பெண்களின் இந்த வளர்ச்சியானது கண்டிப்பாக ஒவ்வொருவரும் பாராட்ட வேண்டிய விடயமாகும்.

அப்படி பாராட்டப் பட வேண்டியவர் வரிசையில் பிரான்ஸை சேர்ந்த பிரேமி பிரபாகரனும் இருக்கின்றார். இலங்கை தமிழ் பெண்ணான பிரேமி பிரான்ஸ் அரசியலில் அசத்தி வருகின்றார். 2020ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் Bondy நகரில் வேட்பாளராக களமிறங்கிய பிறேமி முதல் முயற்சியில் வெற்றி பெற்று நகரசபை உறுப்பினர் ஆனார்.

முடிந்த அளவு துடிப்புடன் செயற்படும் யுவதியாக இருக்கும் பிறேமி எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெற இருக்கும் மாவட்ட மற்றும் பிராந்திய தேர்தலில் இணைவேட்பாளராக போட்டியிட இருக்கிறார். Bondy மற்றும் Pavillons- sous-Bois நகரங்கள் இணைந்த தொகுதியில் முதல் முறையாக இளம் தமிழ் பெண்ணான பிறேமி போட்டியிடும் நிலையில் இவருக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது. நிஜ சிங்கப் பெண்ணுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.!!