" "" "

பிரபல தொகுப்பாளினி பிரியா தூக்கிட்டு தற்கொலை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியா ஜுனிஜா திடீரென தற்கொலை செய்துகொண்ட விடயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொகுப்பாளி பிரியா செய்தி வாசிப்பாளராகவும் பிரபலங்களை பேட்டி காண்பவராகவும் பிரபல தொலைகாட்சியில் பணிபுரிந்து வந்த நிலையில் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் தைரியமானவராக இருந்தார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தயக்கமோ பயமோ இன்றி கேள்விகள் கேட்கும் பிரியா நேற்றைய தினம் அவரது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெற்றோர், மற்றும் சகோதர சகோதரிகளுடன் வசித்து வந்த பிரியா சம்பவ தினத்தன்று அறைக்குள் சென்று நீண்ட நேரமாக வெளியில் வராத நிலையில் பெற்றோர் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப் பட்டுள்ளார்.

தற்கொலை கடிதங்களோ கொலைக்கான தடயங்களோ இல்லாத நிலையில் பிரியாவின் சடலத்தை மீட்ட பொலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் லாக் டவுன் காரணமாக பிரியா மன உளைச்சலில் இருந்ததாகவும் நண்பர்களுடன் பேசவில்லை என்றும் கூறப்படுகின்றது.

அண்மையில் லாக் டவுன் காரணமாக பலர் தற்கொலை செய்துகொள்கின்ற நிலையில் பிரியாவின் மரணமும் அதில் ஒன்று தான் என கூறப்படுகின்றது…!!