" "" "

தனிமையில் இருக்க விரும்புகிறேன் 6 மாதம் உன் தாய் வீட்டில் இரு என கூறிவிட்டு கணவர் செய்த கேவலமான செயல்.! 6 மாதங்கள் இதனால் தான் மனைவியை பிரிந்து இருந்துள்ளார்.!!

சென்னையில் தனிமை வேண்டும் என மனைவியிடம் கூறிவிட்டு தாயாருடன் இணைந்து கணவர் செய்த செயல் தொடர்பாக இளம் பெண் ஒருவர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்சினி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்பவரை 4 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆரம்பத்தில் கொடுத்த சீதனம் இருக்கும் வரை நன்றாக இருந்த லாரன்ஸ் கொடுத்த அனைத்தையும் போதை பொருள் பாவனை காரணமாக விற்றுள்ளார். பின்னர் மீண்டும் சீதனம் வேண்டும் என மனைவியிடம் சண்டையிட ஆரம்பிக்க பிரியா பெற்றோரிடம் சென்று பணம் பெற்றுக் கொடுத்ததுடன் கணவருக்கு பைக் ஒன்றும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

வழமை போல் மீண்டும் சண்டையிட ஆரம்பித்த லாரன்ஸ் அடித்து துன்புபுறுத்த ஆரம்பித்துள்ளார். இதற்கு லாரன்ஸின் அம்மா ஜெயசீலியும் உடந்தையாக இருந்துள்ளார். அத்துடன் தாய் வீட்டிற்கு சென்று பணம் இல்லாமல் வர வேண்டாம் என கூறியுள்ளார். அடித்து விரட்டியதால் தாய் வீடு வந்த பிரியதர்சினி எப்படியோ பணத்தை ஏற்பாடு செய்து கணவரை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

இதற்கு லாரன்ஸ் பணம் வேண்டாம் 6 மாதங்கள் தனிமையில் இருக்க விரும்புகிறேன், எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டுவிட்டு வந்து அழைத்துச் செல்கிறேன் என கூறியுள்ளார். கணவர் திருந்திவிட்டதாக நினைத்த பிரியதர்சினி 6 மாதங்கள் தாய் வீட்டில் இருந்துள்ளார். அதுவரை அலைபேசியில் கணவருடன் பேசியுள்ளார்.இந்த நிலையில் 6 மாதம் முடிந்த பின்பும் கணவர் அழைத்துச் செல்லாததால் கணவர் வீட்டிற்கு வந்த பிரியதர்சினி அதிர்ந்து போயுள்ளார்.

அங்கு கணவர் ஏற்கனவே திருமணம் செய்த பெண் இருந்ததுடன் பிரியதர்சினியிடம் சண்டையிட்டுள்ளார். ஜெயசீலி, லாரன்ஸ், மற்றும் புதுமணப்பெண் திவ்யா ஆகியோர் பிரியதர்சினியை மோசமாக தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து அயலவர்கள் பிரியதர்சினியை காப்பாற்றி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து தாய்வீட்டில் தன்னை விட்டு விட்டு கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக பிரியதர்சினி கொடுத்த வழக்கை பொலீஸார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.!