" "" "

என் கணவரை தாருங்கள், வீதியில் இருந்து கதறிய வருங்கால நீதிபதி.! கண் கலங்கிய மக்கள்.!!

எனக்கு என் கணவர் மட்டும் தான் வேணும், வாழ் நாள் முழுவதும் அவருடன் வாழ வேண்டும் என இளம் பெண் ஒருவர் கதறி அழுத சம்பவம் அனைவரின் மனதையும் கலங்க வைத்துள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரியதர்சினி. இவர் வழக்கறிஞராக இருப்பதுடன் நீதிபதி தேர்வுக்காக படித்து வருகின்றார். இவருக்கு பெற்றோர் ராஜ ஷெரின் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்தின் பின் கணவர் வீட்டில் வாழ்ந்து வந்த பிரியதர்சினியிடம் மணமகனின் பெற்றோர் பணம் பறிக்க ஆரம்பித்துள்ளனர்.

101 சவரன் நகை, 2 கோடி பெறுமதியான சொத்து, 10 லட்சம் பணம் என கொடுத்து செய்த திருமணத்தில் தொடர்ந்தும் பணம் போதாது என்ற பேச்சு வர கணவர் மீதான பாசத்தால் அனைத்தையும் கொடுத்துள்ளார் பிரியதர்சினி. ஆனால் கொடுப்பது குறைந்த போது மனைவியை பிரிய முடிவு எடுத்துள்ளார் இதனால் மனமுடைந்த பிரிய தர்சினி பொலீஸில் புகார் அளித்த நிலையில் சட்ட ஆலோசனையின் பேரில் இருவரும் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர்.

மிகவும் மகிழ்ச்சியாக இருந்த பிரியர்சினியிடம் சென்னையில் நல்ல வேலை கிடைத்துள்ளதாகவும் அங்கு சென்று வீடு எடுத்து ஏற்பாடுகள் செய்துவிட்டு பிரியதர்சினியை கூட்டிச் செல்வதாக ஷெரின்ராஜ் கூற சரி என கூறியுள்ளார் பிரியா. சென்னை போன கணவர் 1 மாதம் வரை அழைத்துச் செல்லவில்லை, போனிலும் 2 நிமிடங்கள் மட்டுமே பேசியுள்ளார். இந்த நிலையில் திடீரென வீட்டிற்கு வந்த ஷெரின் ராஜ் சில மணி நேரங்கள் மட்டுமே இருந்துவிட்டு சரியாக பேசாமல் வீட்டை விட்டு வெளியேறி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஒரு நாள் முழுவதும் கணவர் இல்லாததால் மாமியார் வீட்டிற்கு பிரியதர்சினி சென்ற போது கணவர் மாமியார் மாமனார் என அனைவரும் சேர்ந்து அடித்து வெளியே தள்ளி கதவை மூடியுள்ளனர். வீதியில் இருந்து அழுத பிரியதர்சினியை பொலீஸார் விசாரித்த போது நடந்தவற்றை கூறிய நிலையில் பொலீஸில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து ஷெரின்வீட்டிற்கு பொலீஸார் வந்த போது குடும்பத்தினர் தலை மறைவாகியுள்ளனர். இதனை தொடர்ந்து பிரியதர்சினியிடம் நடத்தப் பட்ட விசாரணையில் நீதி பதி படிப்புக்கு தடை விதித்ததாகவும் வக்கீல் தொழிலை கை விடும் படி மிரட்டியதாகவும் தெரிவித்ததுடன் கணவர் நல்லவர் தான் என்றும் மாமியார் வேறு பணக்கார பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கப் போவதால் பிரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.!!