" "" "

“என் மகனை சட்டத்தால் எதுவும் செய்ய முடியாது” அப்பாவி பெண்ணை கற்பழித்து கொலை செய்தவனின் தந்தையின் பேட்டியால் அதிர்ச்சியில் பெற்றோர்..!!

ஹைதராபாத்தில் நேற்றைக்கு முன் தினம் கொடூரமான முறையில் கற்பழித்து கொல்லப் பட்டவர் கால் நடை மருத்துவர் பிரியங்கா செட்டி. வழமை போல் பணிக்கு சென்று திரும்பிய போது டூ வீலர் பஞ்சர் ஆனதால் வழியில் நின்ற பிரியங்கா செட்டிக்கு உதவுவது போல் நடித்து கடத்தி கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்ததுடன் தீ வைத்து எரித்திருந்தனர்.

பிரியங்கா கற்பழிக்கப் பட்ட இடத்தில் கிடைத்த தடயங்களின் படி பொலீஸார் முகமது பாஷா, நவீன், ஷிவா,கேஷவேலு ஆகியோரை கைது செய்தனர். இதில் பாஷாவிற்கு மட்டுமே 19 வயது..மற்றவர்கள் முறையே கேஷவலு 18. நவின் 17 மற்றும் ஷிவா 17 . கொடூர செயலை செய்தது சிறுவர்கள் என்பதால் அவரது குடும்பத்தினரிடம் பிரபல மீடியா பேட்டி எடுத்துள்ளது.

இதன் போது ஷிவாவின் தந்தை என் மகனுக்கு 17 வயது தான் ஆகிறது. அவனை யாராலும் எதுவும் செய்ய முடியாது சிறுவனான அவனுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கொடுக்க முடியாது என பேசியது மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை மகன் வீணாக்கி விட்டுள்ளான்.

அதனை பற்றி பேசாமல் துடிக்கும் பெண்ணின் பெற்றோரின் வலியில் பங்கு கொள்ளாமல் தன் மகன் சரி என்பது போல் பேசிய ஷிவாவின் தந்தைக்கு எதிராக கோஷங்கள் போட தொடங்கிள்ளனர். அத்துடன் சிறுவர்கள் என்று பார்க்காமல் இவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்..!!