“கை வெட்டுப் பட்டு நான்கு நரம்புகள் அறுந்து விட்டது” குக் வித் கோமாளி புகழ் காமெடி நடிகர் புகழ் வாழ்வில் நடந்த சோகம்..!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருப்பவர் புகழ். இவரை பார்த்தாலே சிரிப்பு வருகிறது. தற்போது சூப்பர் ஹிட்டாக போய்க்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழின் பங்கு தான் அதிகமாக இருக்கிறது. புகழுடன் இருந்தால் வெற்றி பெறலாம் என போட்டியாளர்கள் நினைக்கும் அளவிற்கு புகழின் முயற்சி இருக்கிறது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

புகழ் இந்த இடத்திற்கு வருவதற்கு பட்ட கஷ்டங்கள் பற்றி பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். வெறும் 100 ரூபாயுடன் சென்னை வந்த புகழ் அங்கு வாகனம் வாஷ் செய்யும் கடையொன்றில் பணி புரிந்து வந்துள்ளார். பின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் இயக்குனரின் உதவியுடன் கலக்கப் போவது யாரு ஆடிஷன் வந்த போது நிராகரிக்கப் பட்டுள்ளார்.

இரண்டு சீசன்கள் தொடர்ந்து நிராகரிக்கப் பட்டதால் மீண்டும் வாகன வாஷிங் தான் சரி என வேலை பார்த்துள்ளார். இடையில் ஒருவர் வந்து மீண்டும் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என அழைத்துச் சென்றுள்ளார். சென்றவர் கையில் இருந்த பணம் போன் உட்பட அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளார்.

கையில் இரு ரூபாய் கூட இல்லாத நிலையில் அருகில் கட்டடம் ஒன்றில் கட்டிட வேலைக்கு சேர்ந்து வேலை செய்து வந்த போடு வெட்டுப் பட்டதில் நான்கு நரம்புகள் வெட்டுப் பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை முடித்து வந்த போது இருந்த வேலையும் இல்லாமல் போனது. அதன் போது மறுபடியும் விஜய் டிவியில் முயற்சி செய்து, கலக்கப் போவது யாரு,

சிரிச்சா போச்சி என பெண்ணாக நடித்து தற்போது ஓரளவு மக்களிடம் சென்றடைந்து விட்டதாக கூறிய புகழ் விஜய் டிவி கொடுத்த வாழ்க்கை இது எப்போதும் மறக்க மாட்டேன் என கண் கலங்கியுள்ளார். தற்போது அதிகம் பேசப் படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை நல்ல முறையில் பயன் படுத்தி மக்களை சிரிக்கப் வைப்பேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..!!