porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

மெய் மறந்து ஆனந்த கூத்தாடும் அவுஸ்திரேலிய தமிழர்களும், அவர்களின் ஆனந்த இரவு கேளிக்கை வெறியாட்டமும்!!

எந்த நேரமும் ஓயாத வேலை, காலையில் வேலைக்குப் போய், மாலையில் வீட்டிற்குள் வந்தாலும் அயலவர்களுடன் முகங் கொடுத்துப் பேச முடியாதவராய் நாம். அடுத்த வீட்டில் யார் இருக்கிறார் என்றே அறிந்திட முடியாத இயந்திரமயமான வாழ்வு, எப்போதாச்சும் ஒரு நாள் ஒரு தமிழ்ச் சங்க ஒன்று கூடல் அல்லது தமிழ்க் கடைக்குப் போகும் போதோ, இல்லா விட்டால் கோயிலுக்குச் செல்லும் போதோ அரிதாக தென்படும் தெரிந்த முகங்கள், கூடவே புன்முறுவல் இவற்றோடு தான் அன்றாடங்களை நாம் கழித்துக் கொண்டிருக்கிறோம்.
எம் போன்றவர்களுக்கு, எப்போதாவது ஒரு நாள் வார இறுதியில் பிறந்த நாள் பார்ட்டி – திருமண நாள் கொண்டாட்டம் என்று பார்ட்டிகள் வந்து போகும். இந்த மாதிரிப் பார்ட்டிக்குச் செல்லும் போது தான் பல விதமான மனிதர்களை – அட எம் தமிழர்களை நாம் கண்டு கொள்ளும் அரிய வாய்ப்பும் வந்து கொள்ளும்!

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

அப்புறம் என்ன? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எல்லாவற்றையும் சொல்ல ஒரு பதிவு போதாது அல்லவா?
நமது அவுஸ்திரேலியாவில் தமிழ் ஆட்களின்ர தொகை என்பது ஜரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு. இப்படி இருக்கையில் நான் இருக்கும் மெல்பேணில், உள்ள தமிழர்களின் சனத் தொகை எவ்வளவு என்பது உங்களுக்கே புரியும். இப்படியான சூழலில் எமது மெல்பேண் வாழ் தமிழர்கள் பெரும்பாலும் தமது சுற்றத்தார், உறவினர்கள் கூட சேர்ந்திருப்பது என்பது அரிதிலும் அரிது. அப்படியான வாழ்க்கைச் சூழலில், நாங்கள் எப்போதாவது சந்தோசமாக இருக்க வழிகாட்டுபவை இந்தப் பார்ட்டிகள் தான்.

இப்படித் தான் சமீபத்தில் ஒரு பார்ட்டிக்கு அழைப்பு வந்திச்சு. போனேன் , தெரிந்த சில முகங்களுடன், தெரியாத பல முகங்களையும் கண்டு புன்னகைத்துக் கொண்டேன். கையில் விதம் விதமான குடி வகைகளுடன் விருந்துபசாரம் ஆரம்பமானது. சீயர்ஸ் சொல்லி ”தம்பி குடியுமன் என்றார் ஒருவர்”.. ”அண்ணை குடிப்பதில்லை , எனக்கு Redbull போதும் என்றேன்”.. ஆனாலும் விடுவதாயில்லை. ஓசிக் குடி என்றால் எவன் தான் விடுவான் என்ற நிலையில் பலர் சோம பான விருந்தில் மூழ்கிக் கிடக்க, நானோ ஒண்ணும் வேணாம் இடத்தைக் கொஞ்சம் காலி பண்ணலாம் என்று நகர்ந்தேன்.

ஒவ்வோர் மேசையிலும் ஒவ்வொரு விதமான சம்பாஷணைகள். அவுஸ்திரேலியாவைத் தம் விரல் நுனிக்குள் வைத்திருப்பவர்கள் முதல், இறுதிப் போரில் அண்ணன் பிரபாகரனுக்கு மெய்ப் பாதுகாவலராக நின்றவர்கள் வரை இங்கே தம் வீர தீரங்களை ஒப்புவித்துக் கொண்டிருந்தார்கள்.சற்றுத் தொலைவில் ஒரு கூட்டம், என்னடா என்று ஓடிப் போனால் கானக் குயில் கல்பனா அக்காவைச் சூழ ஒரு ரசிகர் பட்டாளம்… அரசியலில் ஆரம்பித்து, அடுத்தவர் அந்தரங்கம் வரை ஊடுருவி… சில சமயம் அடி தடியுடனும் முடிந்து போகும் புலம் பெயர் தேசப் பார்ட்டிகள்..

”செந்தமிழன் சீமான் விடுதலைக் கழகம் உருவாக்கியிருக்கிறம் , மறக்காமல் போன் நம்பரைத் தந்திட்டுப் போம்” என்றார் ஒருத்தர், இன்னொருத்தரோ ”மாதம் மாதம் ஒரு 50 டொலர் தாரும் தம்பி, சீமான் முதலமைச்சரா வந்தால் தானே , தமிழீழத்தையும் பிடித்துக் கொடுப்பார்” என்று புலம்பினார். என்னடா கொடுமையா இருக்கே என்று தலையில் கை வைத்துக் கொண்டு உணவு பரிமாறும் பக்கம் போனேன்..

‘ஆமைக் கறி தொட்டக்கம், ஆட்டிலறி அடிக்கும் போது ஷெல்லுக்குத் தப்பித் தப்பி ஓடிய முக நூல் சுவாரஸ்யங்கள் வரைக்கும் அலசல் தொடர்ந்தது. விதண்டா வாதம் கதைத்துக் கொண்டிருந்த என்னை வந்து காந்தனும், நிமலனும் எழுப்பினார்கள், ‘ வாடா மச்சான்…. முன்னாலை உள்ள கோலுக்கை (Hall இனுள்) இப்பத் தான் அயிட்டம் ஓப்பின் பண்ணுறாங்கள்… வடா… ஒரு அடி அடிச்சுப் போட்டுச் சாப்பிடுவம்….. ‘இல்லை மச்சான்… கேட்டதுக்கு நன்றியடா(இது நான்) நான் குடிக்கிறேல்லை தெரியாதோ…?? குடிக்காட்டி என்ன கொஞ்சம் லைற்றா அடிச்சுப் பாரனடா….. இல்லை என்னை விடுங்கடா….. நான் குடிக்கிறேல்லை……. என்று சொல்லியும் கேட்பதாக இல்லை……. குழந்தையும், மனைவியையும் அழைத்து வந்ததால், பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்று விட வேண்டிய நிலை, ஆனாலும் மனுசி ட்ரைவிங் செய்யும் என்று சொல்லி குடிக்க வைப்பாங்கள் என்று தெரிந்து கொண்டே பொய்யைச் சொன்னேன். தப்புவதற்காக.

”வாடா வா….. லெமன் ஜுஸ் என்றாலும் கொஞ்சமா அடிச்சுப் பாரடா” என்ற நச்சரிப்பினைத் தாங்க முடியாத படி குடி மக்கள் திருவிழாவினைப் பார்க்க நானும் புறப்பட்டேன்….

’’தம்பியவை…. இந்தக் காலத்திலை கண்டிப்பாகக் குடிக்கத் தெரிஞ்சிருக்க வேணும்… குடிக்கா விட்டாலும் பரவாயில்லை.. குடிக்கிற மாதிரி நடிக்கத் தெரிஞ்சிருக்க வேண்ம்… குடிக்கத் தெரிஞ்சிருந்தால் தான் பொம்பிளையளுக்கும் ஆம்பிளையளைப் பிடிக்கும் என்று நீட்டி முழக்கினார் சோமண்ணை….
டேய் பொடியள் ”தண்ணியையும் மனுசியையும் நல்ல ‘சுமூத்தாக’ (Smooth) கையாள வேணும்…..நல்ல சொப்ற்றாக (Soft) கொண்டு போகத் தெரிய வேணும், இல்லையெண்டால் விசயம் பெரிய தலையிடியாகப் போயிடும் என்றார் செல்லையா அண்ணை….
”ஏன் அண்ணை என்ன காரணம்??” என்று நான் விளக்கம் கேட்டன்..
”தம்பி விளக்கம் கேட்கிற வயசிலையே நீர் இருக்கிறீர்? என்று கேட்டார் சோமர், ”சொன்னால் விளங்கிக் கொள்ளும்” மேலதிகமாக விளக்கம் தர முடியாது ராசா என்று நிறுத்தி விட்டார்”..!!

பின் வரிசையில் ஓவர் போதையில் ஒருத்தர் ஈனஸ்வரத்தில் முனகுவது கேட்டது!

‘கடைசிச் சண்டை நேரம் நான் இருந்திருந்தாலாவது கொஞ்ச நாளைக்கு நின்று பிடிச்சு.. ஆமிக்கு நிறைய இழப்பைக் குடுத்திருக்கலாம். என்னுடைய சிறப்புப் பணி காரணமாக தம்பி(பிரபாகரன்) என்னை அப்பவே அவுஸ்திரேலியாவுக்குப் பணி செய்ய அனுப்பிப் போட்டார் என்றார் ஒருவர்…
சீ.த் தூ… , போதையில இந்த கிழடு பேசுற பேச்சைப்பாரன், ”என்னது அண்ணை அனுப்பினவரோ?”
”முந்திக் கொழும்பிலை கிளறிக்கல் சேர்விசிலை இருந்து போட்டு, மகன் ஸ்பொண்சர் (Sponsor) பண்ண ஒஸ்ரேலியா வந்து இயக்கத்தும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையெண்டு ஒரு போராட்ட நிகழ்வுகளிலையும் தலைக் கறுப்பைக் காட்டாமால் இருந்த நீங்கள் இயக்கமோ? என அனல் பறக்க வினாவினைத் தொடுத்தான் நிமலன்… எப்ப முளைச்ச இயக்கம் நீங்கள்? மனுசன்… நைசாகக் கழர வெளிக்கிட்டார்….

Tamilgun வெப்சைட்டில திருட்டுப் படம் பார்க்கும் போது, பொறுத்த கட்டத்திற்கு விசிலடிச்சுக் குழப்பும், விசிலடிச்சான் குஞ்சுகள் போல..
திடீரெனச் சந்தேகம் பிடித்தவராக ஆறுமுகத்தார் ‘புலிகள் எங்கே இருக்கிறார்கள் என்று குடி போதையில் இருந்தவர்களைக் குழப்பும் வகையில் கேள்விக் கணையினைத் தொடுத்தார்? கேட்டது தான் தாமதம் “விமலன் அண்ணை ஓடிச் சென்று “இந்தா பாருங்கோ எனக்கு தம்பி பிரபாகரன் கையொப்பம் இட்ட கடிதம், இந்தா பாருங்கோ அவரோட நான் எடுத்த போட்டோக்கள்” என்று தன் அப்பிள் ஐபோனில் பதிவேற்றி வைத்திருந்த போட்டோவை காட்டி சுய தம்பட்டம் அடிக்க வெளிக்கிட்டார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்தவனும், முன்னாள் போராளியுமான காந்தன் “புலிகள் இப்ப புலம் பெயர்திருக்கீனம். உங்களுக்குத் தெரியாதோ? இப்போ பேஸ்புக்கில இருக்கீனம்”, 2009ம் ஆண்டிற்குப் பிறகு, உலகளாவிய ரீதியில் மிக வேகமாக பேஸ்புக்கில் வளர்ந்த விடுதலை அமைப்பு – புலிகள் அமைபென்பது தெரியாதோ உங்களுக்கு? என்று மிகவும் கோபமாக கேட்டான். நீங்கள் வாயை மூடிக் கொண்டு வந்த வேலையைப் பாருங்கோவன் என்ற படி தீபன் கதையினைத் திருப்ப இரவு உணவு ஆரம்பமானது.. இரவு உணவு முடிந்ததும் நடன நிகழ்வு களை கட்டத் தொடங்கியது…

கல்பனா அக்கா.. சின்னச் சின்ன ஆசை தொடக்கம், சலோமியா வரை மைக்கைத் தலை கீழாகப் பிடித்து பாட.. செல்பி எடுப்பவர்களும், அக்காவிற்கு அவுஸ்திரேலியாவில் ரசிகர் மன்றம் அமைத்து, கோவில் கட்டாத குறையாக குதூகலமாக அக்காவைக் கொண்டாடுவோரும், கல்பனா அக்காவின் பின் செல்லும் ரசிகர் படையின் நடனமும் பார்ட்டியின் சிறப்பம்சங்களுள் ஒன்றாகியது!!

நாக்க முக்கா…. நாக்க முக்கா… என்ற பாடலுக்கு பிரபல தமிழ்ச் சங்கப் புலவரின் மனைவியார் சாறியை முழங்காலிற்கு மேல் தூக்கிக் கட்டியபடி ஆடிய கும்மாங்குத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது…. யாரோ ஒருத்தர் அந்த நடனத்தை பேஸ்புக்கில் போட…அது வைரலாகியது தான் தாமதம், அடுத்த பிறந்த நாள் பார்ட்டியில் அன்ரியின் நடனம் இடம் பெற வேண்டும் என இன்னோர் கோஷ்டி அடம் பிடித்தது உபரித் தகவல்..

இப்படித் தான் எங்கள் பல பேரின் புலம் பெயர் பார்ட்டிகள் கழிகிறது!!

பொறுப்புத் துறப்பு: இக் கட்டுரையில் தனி மனித தாக்குதல்களை தவிர்க்கும் நோக்கில், கற்பனைப் பெயர்கள் ஒவ்வோர் பாத்திரங்களிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

#கமலேஷ்

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.