பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகெனுக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு..! கொண்டாடும் ரசிகர்கள்…!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப் பட்டவர் முகென். மேடைப் பாடகரின் மகனான முகென் கலைத்துறையின் மீதான காதலால் இசைத்துறையை தேர்ந்தெடுத்து பாடல் எழுதுவது, பாடுவது, நடிப்பது, இயக்குவது என பல திறமைகளை வெளிப்படுத்தி வந்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

எத்தனை திறமை இருந்தாலும் சரியான வாய்ப்புகள் இல்லாவிட்டால் நிச்சயம் வெற்றிபெற முடியாது முகெனுக்கு அந்த வாய்ப்பை விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கொடுத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட முகென் டைட்டிலை வெற்றிப் பெற்றார். இந்த நிலையில் முகெனுக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது.

தளபதி ரசிகரான முகெனுக்கு முதல் திரைப்படமே தளபதி விஜயுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தளபதிப்”64″ திரைப்படத்தில் முகென் நடிப்பது உறுதியாகி உள்ள நிலையில் தற்போது முகெனின் பாடல் ஒன்றை ரஹ்மான் மற்றும் அனிருத் ரசித்துள்ளதுடன் முகெனை சீக்கிரம் சந்திக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் 100 நாள் கொண்டாட்டத்தின் போது சூப்பர் சிங்கர் பிரியங்கா மற்றும் செளந்தர்யா ஆகியோர் முகெனுடன் இணைந்து பாடல் பாடினார்கள். இதில் செளந்தர்யா சத்தியமா நா சொல்லுறன்டி பாடலை முகெனுடன் இணைந்து பாடினார். அந்த பாடல் தனக்கு பிடிக்கும் என கூறிய செளந்தர்யா பிரபல தொலைகாட்சி நடத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் முகெனின் பாடலை பாடியுள்ளார்.

இதன் போது அனிருத் மற்றும் ரஹ்மான் இருவரும் குறித்த நிகழ்ச்சியில் இருந்துள்ளனர். இந்த பாடல் தொடர்பாக செளந்தர்யாவிடம் கேட்ட ரஹ்மான் யூடியூப்பில் முகெனை பாடலை பார்த்து பாராட்டியுள்ளார். அத்துடன் கூடிய சீக்கிரம் முகெனை சந்திப்பதாக கூறியுள்ளார். இதனால் நிச்சயம் முகெனுக்கு ரஹ்மான் இசையில் பாட வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகின்றது..!!