“நானும் முஸ்லீம் தான்” தனது எதிர்ப்பை தெளிவாக டுவிட்டரில் தெரிவித்த ஏ ஆர் ரஹ்மான்.! இதோ வைரலாகும் பதிவு.!!

பாகிஸ்தான், பங்களாதேஷ், உள்ளிட்ட அயல் நாடுகளில் இருந்து வரும் முஸ்லீம் அல்லாதோருக்கு கூடியுரிமை வழங்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுதும் போராட்டங்கள் வெடித்து வருகிறது. அகதிகளாக இந்தியாவில் தங்கி இருக்கும் முஸ்லீகளுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்பதை முஸ்லீம்களுடன் இணைந்து அனைத்து மக்களும் பிரதமர் மோடிக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

உடனடியாக இந்த சட்டத்தை ரத்து செய்யும் படி குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில் ஏ ஆர் ரஹ்மான் அவர்களும் தனது எதிர்ப்பை மறைமுகமாக காட்டியுள்ளார்.

இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்ற போதும் எதிர்ப்போ ஆதரவோ அமைதியாக வெளிப்படுத்தி செல்லும் ரஹ்மான் பிரதமர் மோடியின் இந்த சட்டத்திற்கான எதிர்ப்பை தனது முழுப் பெயரையும் கூறி வெளிப்படுத்தியுள்ளார்.

விமான பயணச் சீட்டில் அச்சிடப் பட்டிருக்கும் தனது முழும்பெயரையும் போட்டோ எடுத்து நானும் முஸ்லீம் தான் என்பதாக டுவிட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரஹ்மானின் எதிர்ப்பு தெளிவாகி உள்ளது என பகிர்ந்து வருகின்றனர்..!!