ராஜீவ் கொலை வழக்குடன் தொடர்புடையவருக்கு பிணை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ரவிச்சந்திரனுக்கு ஒருமாத காலம் பிணை வழங்குமாறு கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையைக் கோரியிருந்தார்.

இந்நிலையில், அந்த கோரிக்கை மனுவை விசாரித்த நீதிமன்றம், எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை, 15 நாட்களுக் பிணை வழங்கியுள்ளது.

ஏற்கனவே நான்கு தடவைகள் ரவிச்சந்திரனுக்குப் பிணை வழங்கப்பட்டிருந்தது. அப்போது அவர் எந்தவித சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடாமையால் அவருக்கு இம்முறையும் பிணை வழங்கப்பட்டுள்ளது.