“ரஜினி இனி உயிருடன் வாழ முடியாது..கொலை செய்துவிடுவோம்” வைரலாகும் வீடியோ..!

அண்மையில் நடந்த துக்ளக் விழாவின் போது ரஜினிகாந்த் அவர்கள் பேசிய விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அனைத்து இடங்களில் இருந்தும் எதிர்புகள் அதிகரித்து வருகின்றது. முரசொலி பத்திரிகை வைத்திருந்தால் திமுக, என்றும் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் அந்த காலத்தில் மக்கள் முடிவு எடுத்தனர். அந்த அளவிற்கு துக்ளக் பத்திரிகை பிரபலமாக இருந்தது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

என கூறியதுடன் 1971ம் ஆண்டு நடந்த கலவரங்கள் பற்றியும் பேசி இருந்தார். அதில் ராமர் சீதை, சிவன் பார்வதி ஆகியோரும் உருவ பொம்மைகளுக்கு செருப்பு மாலை அணிவித்து பேரணியாக பெரியார் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதையும் அதன் போது திமுக ஆட்சியில் இருந்ததாகவும் இந்த பேரணிக்கு திமுக ஆதரவு வழங்கியதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணியான இதற்கு பெரியாரே முக்கிய காரணமாக இருந்தார். அதனை மற்றைய ஊடங்கள் மறைத்த போதும் துணிவுடன் துக்ளக் பத்திரிகை வெளிப்படுத்தியது என பேசினார். இதற்கு பெரியார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினிகாந்த் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியார் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இன்றைய தினம் ரஜினிகாந்த் அவர்கள் வீட்டின் முன்னாள் போராட்டம் நடத்திய பெரியார் ஆதரவாளர்கள் ரஜினியை இனி உயிருடன் விட மாட்டோம் என்றும் தமிழ் நாட்டை விட்டு விரட்டுவோம் எனவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இனி ரஜினியின் திரைப்படம் தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆனால் தியேட்டர்களை உடைப்போம் எனவும் அவர்கள் விடுத்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது..!!