" "" "

வைத்தியசாலையில் இருந்து வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த் அவர்களுக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை!!

இரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த ரஜினிகாந்த் அவர்கள் இன்றைய தினம் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு சென்றார். சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு நேற்றைக்கு முன் தினம் மயக்கம் ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.

இரத்த அழுத்தத்தால் இரத்த ஓட்டம் சீராக இல்லை என சிகிச்சை அளிக்கப் பட்டது. இரண்டு நாட்கள் வைத்திய சாலையில் இருந்த ரஜினிகாந்த் அவர்கள் இன்று வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் வைத்தியர்கள் ரஜினி காந்த் அவர்கள் கண்டிப்பாக ஒரு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும்,

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

வாகன பயணங்கள், அலைச்சல், நடிப்பு போன்றவற்றை செய்ய கூடாது எனவும் எச்சரித்துள்ளனர். அத்துடன் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இலகுவாக தொற்றலாம் என கூறியுள்ளதுடன் எச்சரிக்கையாக இருக்கும் படி கூறியுள்ளனர்.