ரஜினிக்கு இப்படியொரு நிலைமையா? வெளியான தகவலால் பரபரப்பு!

ரஜினிக்கு உயிர் ஆபத்து உள்ளது எனக்கூறி, இந்திய மத்திய உளவுத்துறையால் உள்துறை அமைச்சகத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் இல்லையேல் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் எனவும் திராவிட விடுதலைக் கழகத்தினர் கூறி வந்தனர்.

எனினும், குறித்த விவகாரத்துக்குத் தாம் தான் மன்னிப்புக் கேட்க முடியாது என ரஜினிகாந்த் தெரிவித்தார். இதையடுத்து ரஜினி வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஜினி விவகாரத்தில் உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய அறிக்கை ஒன்றை, மத்திய உளவுத்துறை வழங்கியுள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.