" "" "

அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினிகாந்த் அறிவித்ததற்கான உண்மை காரணம் வெளியானது..! ஜோதிடம் தானா.?

நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் திகதி கட்சி அறிவிப்பேன் என கூறி இருந்த நிலையில் இன்றைய தினம் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அரசியலுக்கு வரமாட்டேன், என்றும் அரசியலுக்கு வருவேன் என கூறி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். பல வருடங்களாக அரசியலுக்கு வருவேன் வருவேன் என கூறி வந்த ரஜினிகாந்த் இன்றைய தினம் இப்படி அறிவித்தது ரசிகர்களுக்கு மட்டும் இன்றி ரஜினியின் பெயரை சொல்லி அரசியல் செய்து வந்த பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது.

அரசியலுக்கு வராவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்வேன், அரசியலை விட மக்களின் அன்பு போதுமானது என ரஜினி தொடர்ந்தும் தெரிவித்த நிலையில் பலரும் முடிவை வரவேற்றுள்ளதுடன், தொடர்ந்தும் அதிகமான திரைப்படங்கள் நடித்து மக்களை மகிழ்ச்சிப் படுத்தும் படி வாழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்தின் இந்த முடிவிற்கு உண்மையான காரணம் என சில விடயங்கள் கசிந்துள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ரஜினிகாந்த் அவர்கள் கடவுள், மற்றும் ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். இதனால் தான் அரசியலில் வருவதற்கான நாள் பார்த்து காத்திருந்தார். இந்த நிலையில் 2021ம் ஆண்டு ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வர சிறந்த ஆண்டு என ஜோதிடர் கணித்திருந்த நிலையில் குரு, மற்றும் சனி மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டால் ஆரம்பிக்கும் படி அறிவுரை கூறியுள்ளார்.

ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் டிசம்பர் 31ம் திகதி அரசியல் பற்றி இறுதி முடிவு எடுப்பார் என கூறியிருந்தனர். ஆனால் அரசியல் பயணம் பற்றி அறிவித்து அடுத்தடுத்த நாளில் உடல் நலக் குறைவால் ரஜினி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார். இதனால் ஜோதிடர் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்க சொல்லியதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. உண்மை ரஜினிகாந்த் அவர்களே அறிவார்கள்.!!