அறுவை சிகிச்சை செய்து காலில் வலியுடன் நடிகர் அஜித் செய்த செயல்..! வியந்து போன நடிகர் ராஜ்கிரண்..!!

தல அஜித் பற்றி தெரியாதவர்கள் யாருமே இல்லை. முயற்சி, தன் நம்பிக்கை போன்றவற்றை இவரிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என கூறுவார்கள். எந்த ஒரு சினிமா ஆதரவும் இன்றி சினிமாவில் தனித்து சாதித்த அஜித் குமாரை மக்கள் கொண்டாடுவதற்கு இதுவும் ஒரு காரணம் தான்.தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தன்னை மாற்றி gun சூட்டிங், கார் ரேஸ்,என அசத்திக் கொண்டிருக்கிறார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அண்மையில் நடிகர் ராஜ்கிரண் இடம் அஜித் குமார் பற்றி கேள்வி கேட்கப் பட்டது. அதற்கு பதில் அளித்துள்ளார். அதில் நான் பார்த்ததில் விசித்திரமான நடிகர். கிரீடம் திரைப்படத்தின் போது அஜித் குமார் அவர்களுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டிருந்தது. இதனால் அஜித் குமார் அவர்கள் நாட்காளியில் இருக்காமல் நடந்துகொண்டே இருந்தார்.

பொறுமையாக இருந்த நான் முடியாமல் ஏன் சார் நடந்து கொண்டு இருக்கின்றீர்கள் என கேட்டேன். அதற்கு காலை மடித்து இருக்க முடியவில்லை, சரியான வலியாக இருக்கிறது என கூறினார். நான் அதிர்ந்து போய் பார்த்தேன். அறுவை சிகிச்சை செய்து சில நாட்களே ஆகி இருந்தது.

காலில் கட்டு போடப் பட்டிருந்தது. அதிர்ந்து போனேன் உடனே சார் இன்னிக்கு தயாரிப்பாளரிடன் சொல்லிட்டு போயிடலாம். கால் ஓகே ஆனதும் தொடங்கலாம் என்றேன். ஆனா அஜித்தோ என்ன சார் நீங்க. எங்கள நம்பி பணத்தை போட்டுட்டு இருக்காங்க. எனக்கு உடம்பு முடியல்லன்னு நின்னா எவ்ளோ நஷ்டமாகிடும்.

பரவால சார் படம் முடிஞ்சதும் ரெஸ்ட் எடுக்கிறேன் என்றார். எனக்கு மனசு கேட்கவே இல்ல, இருந்தாலும் படம் முடிச்சிட்டு தான் ரெஸ்ட் எடுத்தார். இப்ப நினைச்சாலும் இப்படி ஒருத்தரா என்று வியக்க தோன்றும் என தெரிவித்துள்ளார்…!!