“பாலா அல்லது ரியோக்கு” பிக் பாஸ் டைட்டில்!! ரக்ஷனை திட்டி தீர்க்கும் ஆரி ரசிகர்கள். நடந்தது இது தான்.!!
தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் தொலைகாட்சி நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இன்னும் 5 நாட்களில் நிகழ்ச்சி நிறைவடைய உள்ள நிலையில் வெளியேற்றப் பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்து ரசிகர்கள் மற்றும் பைனலிஷ்ட் 6 பேரையும் மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் என்ன தான் ஆரிக்கு வெளியே ரசிகர்கள் அதிகம் இருந்தாலும் ஒரு சிலர் அவரை வெறுத்து வருகின்றனர். ஆரி சின்ன சின்ன விடயத்திற்கு கோபப் படுவது, அடுத்தவரின் குற்றத்தை தேடிக் கொண்டிருப்பது போன்றவை சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த பைனல். வாரத்தில் கூட ஆரி ரியோவுடன் சண்டையிட்டு பிரச்சனையை ஏற்படுத்தினார். இதனை சிலர் இதெல்லாம் ஒரு பிரச்சனையா ஆரி ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என கேட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க தொகுப்பாளர் ரக்ஷனின் பதிவொன்று ஆரி ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. ” பிக் பாஸ் சீசன் 4ல் ரியோ அல்லது பாலா வெற்றி பெற்றால் மகிழ்ச்சி.
தகுதியானவர்களுக்கு தான் டைட்டில் கிடைக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரக்ஷனை லெப்டு ரைட்டு வாங்கியுள்ளனர். இதனால் உடனடியா அவரது போஸ்ட்டை டிலிட் செய்து விட்டார். இருப்பினும் ரக்ஷனை திட்டி தீர்க்கின்றனர் ஆரி ரசிகர்கள்.!!