" "" "

ரம்யா பாண்டியனுக்கு கொடுக்கப் பட்ட வித்தியாசமான பிரமாண்ட வரவேற்பு..! ரசிகர்கள் இவரையா திட்டினார்கள் என வியக்க வைத்த வீடியோ இதோ.!!

பிக் பாஸ் வீட்டில் சிங்கப் பெண் என கொண்டாடப் பட்டாலும் ரசிகர்களினால் விஷப் பாட்டில் என வெறுக்கப் பட்டவர் ரம்யா பாண்டியன். ஆண்களுக்கு நிகராக பிக் பாஸ் வீட்டில் விளையாடிய ரம்யா பாண்டியன் ஆரம்பத்தில் இருந்தே டைட்டில் வெற்றி பெறுவார் என்று எதிபார்க்கப் பட்டவர். எதையும் நேரடியாக பேசி தீர்த்துக் கொள்ளும் ரம்யாவிற்கு ஆரியுடன் சண்டை ஏற்பட்டது.

டாஸ்குகளின் போது ஆரி அடுத்தவரை குறை சொல்லுவதை ரம்யா விரும்பவில்லை. இதனால் ஆரியுடன் நேரடியாக சண்டையிட்டது மட்டும் இன்றி ஆரி இல்லாத இடத்திலும் பேச தொடங்கினார். இதனால் ரம்யாவிற்கு ரசிகர்கள் குறைய ஆரம்பித்தனர். ஆரி ரசிகர்கள் ரம்யாவை வெளியேற்ற முயற்சி செய்த போதும் இரண்டு முறை தப்பினார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதன் பின் பைனல் வரை வந்த ரம்யா பாண்டியன் 4ம் இடத்தை பிடித்து வெளியேறினார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த போட்டியாளர்கள் ஏற்கனவே ரம்யாவிற்கு வெளியே ஹேட்டர்ஸ் இருக்கிறார்கள் என கூறியதுடன் ரம்யாவிற்கு ரசிகர்கள் நரி பாண்டியன், விஷ பாட்டில் என்றெல்லாம் பெயர் வைத்திருப்பதை கூறியிருந்தனர். ஆனால் ரம்யாவின் குடும்பத்தினரோ நீ சிறப்பாக விளையாடினாய்,

இதில் ஒன்றும் இல்லை என்று உற்சாகம் கொடுத்தனர். நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ரம்யாவிற்கும் அதே உற்சாக வரவேற்பு கொடுக்கப் பட்டது. மிகப் பிரமாண்ட முறையில் ரம்யா பாண்டியனுக்கு கொடுக்கப் வரவேற்பு இதோ..!!