ரியோவை காப்பாற்ற ஆரம்பித்திருக்கும் பிரபல தொலைகாட்சி.! என்ன என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா.? இதோ.!!
பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு தொலைகாட்சியின் செல்லப் பிள்ளையாக இருப்பவர் ரியோராஜ். தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த ரியோ பின் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வர ஆரம்பித்தார். கொரோனா வைரஸ் காரணமாக திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ரியோ பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் வீட்டிற்குள் வந்துவிட்டார்.
வீட்டில் அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், சோம் சேகர், நிஷா , ரியோ என குரூப் அமைத்துக் கொண்ட ரியோ நல்லவராக நடிக்க ஆரம்பித்துள்ளார். வீட்டிற்குள் வந்து சில நாட்கள் மட்டுமே ரியோவாக இருந்தவர் பின் டைட்டில் வெற்றிபெற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.
பிரபல தொலைகாட்சி ஏற்கனவே தீர்மானித்தது போல் ரியோவை வெற்றியாளராக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு பிடித்தவராக இருந்த பாலாஜியை கெட்டவராக்கியது, ரசிகர்களின் ஆதரவை பெற்ற சுரேஷ் சக்ரவர்த்தியை வெளியேறியது, பாய்ந்த ஆரியை பணிய வைத்தது, கடந்த சில நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சோம், சாம், கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், உட்பட பலரை காணவில்லை. ரியோ நல்லவர் வல்லவர் என்பதாக காட்ட ஆரம்பித்துள்ளனர்.
ரியோ நிஷாவிற்கு நல்ல அறிவுரை வழங்குவது, என ஆரம்பித்து அனைவருடனும் ஒற்றுமையாக இருப்பது போல் நிகழ்ச்சியில் காட்டப் படுகிறது. அது மட்டும் இன்றி இந்த முறை ரியோ வெளியேற மாட்டார். அடுத்த வாரம் ரியோ கேப்டன் என்பதால் யாராலும் நாமினேட் பண்ண முடியாது, இப்படியே பைனல் வரை ரியோ காப்பாற்றப் படுவார். அது வரை நல்லவராகவே காட்டப் படுவார். ரியோவின் உண்மை முகத்தை unseen காட்சிகளில் நீங்கள் காணலாம்.!