பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகாவை சீண்டிய நபர்..! பதிலுக்கு ரித்விகா செய்த செயல்..!!
பிக் பாஸ் சீசன் 2ல் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர் நடிகை ரித்விகா. தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி சில திரைப்படங்கள் நடித்திருந்த போதும் பெரிதாக பேசப் படாத இவர் நடிகர் சூர்யாவின் உதவியினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இங்கு யார் என்ன அடித்துக் கொண்டாலும் எனக்கென்ன என அமைதியாக இருந்த இவர் இறுதி போட்டியில் இறுதியில் டைட்டிலை தூக்கிச் சென்றார். அதன் பின் சில திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.
அண்மையில் ரித்விகா தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படத்தை பார்த்த நபர் நீங்கள் Aunty போல் இருக்கிறீர்கள், இனி திரைப்படங்களில் Aunty அம்மா கதாபாத்திரங்கள் நடியுங்கள் நீங்கள் அதற்கு தான் சரி என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரித்விகா நீங்கள் எனக்கு Uncle போல் உள்ளீர்கள், அதனால் உங்களை கெட்ட வார்த்தையால் திட்ட முடியாது உள்ளது, எனவே இங்கு இருந்து வாயை மூடிக் கொண்டு சென்று விடுங்கள் என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சபாஷ் சரியான பதிலடி என கூறி வருகின்றனர்..!!