" "" "

கல்யாண கனவுடன் வந்த இளைஞனை சடலமாக பார்க்க நேர்த்த கொடுமை, இந்தியாவை உலுக்கிய சம்பவம்..!!

துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் உயிர் இழந்தவர்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றது. குறித்த விமானத்தின் மூலம் துபாயில் இருந்து இந்தியா வந்த 191 பேரில் 18 பேர் மரணமடைந்தனர்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பலர் காயமடைந்த நிலையில் 100 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மரணமடைந்தவர்களுக்குள் கேரளாவை சேர்ந்த 24 வயதான மொஹமட் ரியாஸ் என்ற இளைஞனும் உள்ளார். ரியாஸ் கேரளாவில் பட்டப் பட்டப் படிப்பை முடித்துவிட்டு தனது சகோதரனுடன் துபாய் சென்றுள்ளார். அங்கு பணிபுரிந்து வந்த நிலையில் தனது கல்லூரி காதல் பற்றி பெற்றோருக்கு கூறியுள்ளார்.

கல்லூரியில் ஒன்றாக படித்த ஹன்யா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறிய ரியாஸ் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்தால் இந்தியா வருவதாக கூறியதை தொடர்ந்து இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததுடன் குடிம்பத்தினர் நெருங்கி பழகியுள்ளனர்.

இதனால் சீக்கிரம் திருமணம் செய்ய முடிவெடுத்த போது கொரோனா பிரச்சனை வந்துள்ளது. இவை முடிந்து இரண்டு நாட்களுக்கு முன்பு மகிழ்ச்சியாக இந்தியா வந்துள்ளார் ரியாஸ். சில தினங்களில் காதலியை கை பிடிக்கும் நிகழ்வு பற்றி நண்பர்களுடன் பேசி மகிழ்ந்த ரியாஸின் மரணம் அனைவரையும் அதிர வைத்துள்ள நிலையில் அவரது காதலியான ஹன்யாவை எப்படி தேற்றுவது என தெரியாமல் அனைவரும் தவித்து வருவதாக ரியாஸின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்..!!