" "" "

திருநங்கையை உண்மையாக காதலித்த இளைஞன்.! அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி பிரிந்த இரு உயிர்கள்!

திரு நங்கையான காதலி தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து சோகம் தாங்க முடியாமல் அவரது காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு வானொலி அறிவிப்பாளினியான திருநங்கை அனன்யா குமாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை செய்த போது அனன்யா குமாரி அண்மையில் பாலியல் மாற்று சிகிச்சை செய்ததாகவும் இதனால் உடலளவில் அதிகம் பாதிக்கப் பட்டதுடன் தனக்கு நடந்த சிகிச்சையில் தவறு நடந்ததாகவும் தெரிவித்திருந்ததும் பொலீஸில் புகார் கொடுத்ததும் தெரியவந்தது.

சிகிச்சையினால் ஏற்பட்ட வலியினால் மன உளைச்சலில் அனன்யா இருந்ததாக அவரது நண்பிகள் தெரிவித்திருந்தனர்,இதனால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற செய்திகள் வெளியானது… இந்த நிலையில் அனன்யாவை 4வருடங்களாக காதலித்து வந்த அவரது காதலர் ராஜ் நேற்றைய தினம் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பாலின மாற்று சிகிச்சை செய்துகொண்ட பின் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் அனன் யா இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத ராஜ் அவரது நண்பர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த இரண்டு மரணங்களையும் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து பொலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.!!