உங்கள் வீட்டில் ரோஸ் வாட்டர் இருக்கா.!? அப்பிடீன்னா நீங்கள் தான் அழகி..! கெமிக்கல் கிரீமுக்கு இனி BYE BYE சொல்லுங்கள்…!!

ரோஸ்வேட்டரானது ரோஜா இதழ்களின் சாற்றில் தயாரிக்கப்படும்  ஒரு வாசனை நீர் ஆகும். அதன் அழற்சியற்ற தன்மைக்கு இது அறியப்படுகிறது. இது தோல் எரிச்சல் , படை மற்றும் தீவிர வறட்சி போன்ற தோல் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. மேலும், இது தோலின்  pH அளவுகளை பராமரிக்கவும் உதவுகிறது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

டோனராகப் பயன்படுத்தலாம். அதிக பணம் செலவளித்து விலையுயர்ந்த டோனர்கள் வாங்குவதைக் காட்டிலும் குறைந்த விலையில் கிடைக்கின்ற இந்த ரோஸ்வோட்டரை நாம் டோனராகப் பயன்படுத்தலாம். இது தோலினுடைய pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. அத்தோடு மற்ற  டோனர் போன்று, தோலை சுத்தப்படுத்தி சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை  நீக்க உதவுகின்றது.

கிளென்சராகப் பயன்படுத்தலாம்.ரோஸ்வோட்டரைக் கொண்டு முகத்தை ஒரு பஞ்சினால் சுத்தப்படுத்தகின்றபோது முகத்திலுள்ள கிருமிகள், அழுக்குகள் ஆகியன அகற்றப்பட்டு முகமானது மிகவும் மிருதுவாகவும் பளபளப்பாகவும் ஆகின்றது.

மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாம்.நீங்கள் முகத்திற்கு செய்த ஒப்பனைகளை வீட்டிற்கு வந்ததும் கலைத்துக்கொள்வதற்கு கஸ்டப்படகிறீர்களா? கவலைய விடுங்க.   உங்களின் அலங்காரத்தை  நீக்கிவிட இந்த ரோஸ்வோட்டரை  பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில் ஒரு சில துளிகள் ரோஸ்வோட்டர் சேர்த்து, ஹாட்டன் துணியினால் மேக்கப்பை அகற்றிக்கொள்ளலாம். அதன்பின்பு முகமானது மிகவும் மிருதுவாக காணப்படும்.

கண்வீக்கம் மற்றும் கருவளையத்தை நீக்குவதற்கு பயன்படுத்தலாம்.உங்களுடைய கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் கருவளையங்களின் தொல்லை ஆகியவற்றைத் தீர்ப்பதற்கு இந்த ரோஸ்வோட்டரைப் பயன்படுத்தலாம். ஒரு சிறிய பஞ்சில் ரோஸவோட்டரை நனைத்து கண்களின் கீழே வைத்தக் கொள்ளுங்கள். கண்களுக்க குளிர்ச்சியைக் கொடுப்பதுடன் கருவளையங்களையும் போக்கும்.

முகப்பருக்களிற்குச் சரியான சிகிச்சையளிக்கின்றது.ரோஸ்வோட்டரில்  பாக்டீரியா எதிர்ப்பு தன்மைகள் இருப்பதால் நீங்கள் இதை முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தலாம். ரோஸ் வோட்டர் மற்றும்  எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து அந்த கலவையை முகப்பருக்களின் மேல் தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்தப் பின் நீரினால் கழுவிக் கொண்டால் முகப் பருக்களின் தொல்லை இருக்காது.