“வலிக்கிறது விட்டுவிடுங்கள்” என கதறிய பல்கலைக்கழக மாணவிகள்” ஆர்.எஸ்.எஸ். மாணவ அமைப்பு நடத்திய வெறியாட்டம்..!!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தாக்குதல் குறித்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது..குறித்த பல்கலைக்கழகத்தில் விடுதிக்கான கட்டண உயர்வு மற்றும் கற்கைகளுக்கான கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் 70வதாவது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில்..

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

திடீரென பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட அனைவரையும் கத்தி, உருட்டு கட்டைகள், இரும்புத்தடி போன்றவற்றை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் ஜே, என். யூ மாணவர் அமைப்பு தலைவரான அய்ஷி கோஷ் கொடூரமாக தாக்கப் பட்டுள்ளார். அத்துடன் பொதுச் செயலாளர் சதீஷ், துணை தலைவர் சாகோத் மூன் ஆகியோரும் தாக்கப் பட்டுள்ளனர்.

அத்துடன் பெண்கள் விடுதிக்குள் புகுத்த மர்ம நபர்கள் அங்கிருந்த பெண்களையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். நேற்றைய தினம் நடந்த இந்த தாக்குதலில் பல மாணவிகளின் தலை உடைந்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபி என மாணவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் நூற்றுக்கு மேட்பட்டவர்கள் முகங்களை மூடி

விடுதி மற்றும் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து இந்த அட்டகாசத்தை செய்துள்ளனர். இதில் மாணவிகள் கூறுகையில் வலிக்கிறது விட்டு விடுங்கள் என கதறி அழுதோம் ஆனால் விடவில்லை மோசமாக தாக்கினார்கள் என தெரிவித்தனர். இந்த நிலையில் 71வது நாளாக போராட்டம் தொடர்கிறது..!!