" "" "

வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி..! உண்மையில் தற்போது எஸ்பிபி எப்படி இருக்கிறார்.? வைத்தியர் வெளியிட்ட உண்மை தகவல்..!!

கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நிலை பற்றிய வதந்திகள் பரவிக் கொண்டே இருக்கிறது. இறந்துவிட்டார் என்றும், இறக்கப் போகிறார் என்றும் இரக்கம் இன்றி சிலர் பதிவிட்டு வருவது அவரது ரசிகர்களான அனைவருக்கும் வேதனை தான்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த நிலையில் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் நிலை பற்றி விஷேட மருத்துவ நிபுணர் ஒருவர் ஆறுதலான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப் படும் போதே ஏற்கனவே சில நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தார். அவரது வயது, மற்றும் உடல் பருமன் ஆகியவை கூட கொரோனா வைரஸை குணப்படுத்த கஷ்டமாக இருந்தது.

ஆரம்ப கட்ட சிகிச்சை முறைகளில் பின்னடைவு இருந்தால் கூட தற்போது சர்வதேச வைத்திய நிபுணர்களின் அறிவுரையின் பேரில் சிறந்த சிகிச்சை வழங்கப் படுகிறது. இதனால் தற்போது பாலசுப்பிரமணியம் அவர்கள் குணமடைய ஆரம்பித்துள்ளார். அவரது உடல் நிலையில் தற்போது மிக சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில் நார்மல் வார்ட்டில் வைத்து சிகிச்சை செய்ய முடியும் , என்ன தான் ஒரு பக்கம் மருத்துவம் கை கொடுத்தாலும் இன்னொரு பக்கம் உங்கள் பிரார்த்தனைகள் தான் அவரை குணப்படுத்தியுள்ளது. வதந்திகளை நம்பாதீர்கள் எஸ்பிபி அவர்களின் உடல் நிலையில் தற்போது சிறந்த முன்னேற்றம் உள்ளது என தெரிவித்துள்ளார்..!!