" "" "

5 வயது குழந்தையை 15 முறை கத்தியல் குத்தி கொலை செய்த தாய்.! கண்ணீரை வரவைக்கும் காரணம்.!

வெளி நாட்டில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த தமிழ் தாய் ஒருவர் தான் பெற்ற 5வயது குழந்தையை சுமார் 15 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சாயாகி சிவானந்தம் என்கிற 5 வயது குழந்தையே தாயின் கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமடைந்தது.

இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் அண்மையில் வெளியான நிலையில் சாயாகியின் தாயாரான சுதா கருனானந்தம் என்பவரை பொலீஸார் கைது செய்து விசாரணை செய்து வந்த நிலையில் அவரை மன நல மருத்துவமனையில் அனுமதிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5 வயது குழந்தையை கொடூரமாக குத்திக் கொலை செய்துவிட்டு தற்கொலை முயற்சி செய்த தாயாரை பொலீஸார் விசாரணை நடத்தினார்கள். இதில் ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுதாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுதாவிற்கு தான் இறந்து விடுவோம் என்ற பயம் வந்த நிலையில் கணவரிடம் நான் இறந்தால் மகளை பார்த்துக் கொள்வீர்களா என கேட்டுள்ளார்.

கணவரும் உனக்கு எதுவும் நடக்காது என கூறிவந்துள்ளார். சம்பவ தினத்தன்று கணவர் இல்லாத நேரத்தில் மகளை குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனது மரணத்திற்கு முன்னரே மகள் இறந்துவிட்டால் பயமில்லை என்று நினைத்து மகளை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சுதாவை மன நல மருத்துவமனையில் அனுமதிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.!