" "" "

முன்னணி ஹீரோயினாக இருக்கும் சாய் பல்லவி சினிமா வேண்டாம் என எடுத்த முடிவு..! காரணம் இது தானாம்..!!

நாம் 2 1/2 மணி நேரம் பார்த்து படம் நல்லாவே இல்லை என இலகுவாக சொல்லிக் கடக்கும் அத்தனை திரைப்படத்திலும் ஏகப்பட்டவர்களின் உழைப்பு இருக்கும். நல்ல கதையை சரியான முறையில் ஒரு இயக்குனரால் கையாள முடியாமல் போனால் அந்த திரைப்படத்தில் வேலை செய்த அத்தனை பேரையும் அது பாதிக்கும்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதனால் தானோ என்னவோ இயக்குனர்கள் பலர் கொஞ்சம் கண்டிப்புடனேயே நடந்துகொள்வார்கள். அப்படி நடந்து கொள்ளும் இயக்குனர்களில் இயக்குனர் செல்வராகவனும் ஒருவர். இதனை நடிகை சாய் பல்லவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். NGK திரைப்படத்தில் ஒரு காட்சி சூட்டிங் நடந்தது. ஒரு காட்சியை காலையில் தொடங்கி மாலை வரை எடுத்தார் இயக்குனர்.

திரும்ப திரும்ப ஏகப்பட்ட டேக் எதுவுமே சரி வரவில்லை. இடையில் திட்டுவார் நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் நினைத்தது போல் நடிக்க முடியவில்லை. மனம் நொந்து போனேன். வீட்டிற்கு சென்றதும் அம்மாவின் மடியில் படுத்தபடி அழ தொடங்கினேன் எனக்கு நடிப்பு வரல அம்மா..நான் வைத்திய துறைக்கே சென்று விடுகிறேன் என்றேன்.

ஒரு நாள் முழுவதும் ஒரு சிறிய காட்சியை நடிக்க முடியவில்லை என்றால் எனக்கு நடிப்பு வரவில்லை என்று தானே அர்த்தம் என்பதால் சினிமா வேண்டாம் என்றே முடிவெடுத்தேன்… காலையில் அம்மா சமாதானம் செய்து அனுப்பினாங்க ..போய் பயத்திலும் நடித்தேன் முதல் ஷாட் ஏ ஓகே சொல்லி பாராட்டினார்.

ஷாக் ஆகிட்டேன். அம்மா சொல்லி இருப்பாங்களோ என்று அம்மா கால் பண்ணினாங்களா சேர் என கேட்டேன் இல்லை என்றார்கள். அப்பிடின்னா ஒரே ஷாட் ல ஓகே சொல்லிடீங்க என கேட்டேன். எனக்கு இது தான் தேவையா இருந்திச்சி பட் நீங்க நடிக்கல என்றார்.

எந்த ஒரு திரைப்படத்திலும் நான் இவ்வளவு பயந்ததில்லை ஆனால் இயக்குனர் செல்வராகவனிடம் வேலை செய்யும் போது சினிமாவே வெறுத்தது ஆனால் அது நல்லதுக்கு என்பது புரிகிறது. என மேலும் கூறியுள்ளார்..!