" "" "

கிராமத்திற்குள் கொரோனா வராமல் இருக்க பல வருடங்களுக்கு முன்பு சாய்பாபா செய்த பாதுகாப்பு முறை..! தற்போது வரை பயப்படுத்தும் சாய்பாபா கோயில் நிர்வாகிகள் ..!!

2020 ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. 2020 அனைவருக்கும் நல்லதாக அமையும் என ஜோதிட கணிப்புகள் வெளியாகி இருந்த போது ஒட்டுமொத்த மக்களுக்கும் 2020 மிக மோசமான ஆண்டாகவே இருக்கிறது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

கொரோனா வைரஸில் இருந்து எப்படியாவது மீண்டுவிட வேண்டும் என்று ஒவ்வொரு நாடும் முயற்சி செய்து வருகிறது. சில நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழ் நாட்டில் சமயபுரம் அருகில் கீழக்கல்லுகுடி கிராமத்தை சேர்ந்த மக்கள் வித்தியானமான கொரோனா தடுப்பு வளையம் ஒன்றை செய்துள்ளனர்.

கீழக்கல்லுக்குடியில் சக்திவாய்ந்த சாய்பாபா கோயில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இந்த சாய்பாபா கோயில் நிர்வாகிகள் இணைந்து கிராமத்தை சுற்று கோதுமை மா திரித்து கோடு போட்டுள்ளனர். கோதுமை மாவில் மஞ்சள் சேர்த்துள்ளனர். இந்த மா கோட்டை கிராமத்தை சுற்றி போட்டுள்ளனர். அத்துடன் ஆங்காங்கே வேப்பிலை கட்டி உள்ளனர்.

இது பற்றி கோயில் நிர்வாகிகளிடம் கேட்ட போது காலரா நோயால் நாடே பாதிக்கப் பட்டுக் கொண்டு இருக்கும் போது சாய்பாபாவால் கீழக்கல்லுகுடி கிராமத்திற்கு இது போன்ற கோடு போடப் பட்டதாகவும் அதனால் அங்கு காலரா வரவே இல்லையாம். கொரோனாவிற்கும் இந்த மருந்து சரி வரும் என்கின்றனர் சாய்பாபா கோயில் நிர்வாகிகள்..!!