" "" "

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை சமீரா ஷெரிப். கண்ணீருடன் வெளியான வீடியோ திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் போது நடிகை சமீரா ஷெரிப் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். பகல் நிலவு உட்பட பல சீரியல்களில் நடித்த இவர் இயக்குனரும் நடிகருமான சைய்து அன்வரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆரம்பத்தில் இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு இருந்த போதும் இருவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சம்மதம் தெரிவித்தனர்.

திருமணத்தின் பின் சீரியல்களில் இருந்து விலகி இருந்த சமீரா ஷெரிப் கர்ப்பமானார். கர்ப்பமானதில் இருந்து கிரிக்கெட் விளையாடுவது, டான்ஸ் செய்வது என ரசிகர்களிடம் திட்டு வாங்கி கட்டிக் கொண்ட சமீரா, தற்போது தடுப்பூசி போட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கர்ப்பிணிகள் தடுப்பூசி போடலாம் என அறிவிக்கப் பட்ட போதும் பலர் அதற்கு விருப்பம் இல்லாத நிலையில் இருக்க கணவருடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்ட சமீரா தடுப்பூசி போடும் போது கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்ட்டாகிராம், பக்கத்தில் பகிர்ந்துள்ள அன்வர் கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் ஆனால் அதற்கு முன்பு உங்கள் டாக்டரிடம் பரிசோதனை செய்து அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.!