" "" "

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் சனம் ஷெட்டி வெளியிட்ட உருக்கமான வீடியோ.! சனம் ஷெட்டிக்கு குவியும் ஆதரவு.!!

பிக் பாஸ் வீட்டில் எல்லோராலும் ஓரங்கட்டப் படுபவர் என்றால் அது சனம் ஷெட்டி தான். வீட்டில் உள்ள எல்லோருக்கும் நல்லதே செய்தாலும் இறுதியில் கெட்டதில் வந்து முடிந்துவிடும். நிஜத்தில் பல ஏமாற்றங்களை கடந்தே சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார். விபத்து அதன் பின் தர்சனை வைத்து திரைப்படம் எடுத்து அதில் வீணாகி போன பணம்.

காதல் என்ற பெயரில் தர்சனை நம்பி பின் நிச்சயதார்த்தமும் முடிந்த பின் ஏமாற்றம் என எழுந்திருக்க முடியாத அளவு வீழ்ச்சி. ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடையும் போது அருகில் இருந்து தட்டிக் கொடுத்த இரண்டு ஜீவன்கள் என்றால் அது சனம் செட்டியின் தாய் மற்றும் தந்தை தான்.

என்ன தான் சனம் ஷெட்டியை திட்டினால் கூட சனம் போல் நிஜத்தில் நேர்மையான பெண்கள் யாரும் வீட்டில் இல்லை. அடிக்கடி கோபப் படும் சனம், அந்த கோபத்திலும் நேர்மை இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சனம் ஷெட்டி செல்வதற்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தனது தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததுடன் இம்முறை உங்களுடன் என்னால் இருக்க முடியாது, அதனால் வாழ்த்து தெரிவிக்கிறேன், சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.!