மனைவியுடன் சென்று நிஜ குருநாதாவை சந்திந்த சாண்டி மாஸ்டர்.!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

பிக் பாஸ் வீட்டில் என்ன தான் சண்டைகள், கோபங்கள், அழுகைகள் என ஏராளம் இருந்தாலும் அனைவரையும் சிரிக்க வைக்க ஒருவர் இருந்தார் என்றால் அது சாண்டி மாஸ்டர் தான். ” சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கு சிரிக்காத நாள் இல்லையே”

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த பாடல் வரிகளுக்கு பொறுத்துவது போல் கழிவறையில் போய் அழுதுவிட்டு வெளியே வந்து அடுத்தவரை சிரிக்க வைக்க சாண்டியால் மட்டுமே முடிந்திருந்தது. ஒரு சில நேரம் போட்டியாளர்களுடன் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் மீண்டும் போய் பேசி அனைவரையும் மகிழ்ச்சியாக மாற்றியது சாண்டி மாஸ்டர் மட்டும் தான்.

பிக் பாஸ் இரண்டு சீசனிலும் பிக் பாஸ் குரலை பார்த்து பயந்த போட்டியாளர்கள் இம்முறை பிக் பாஸ் குரலுக்கே பெயர் வைத்தார்கள் என்றால் அது சாண்டி தான். பிக் பாஸ் குரலை குருநாதா என்றழைத்த சாண்டி தனது உண்மையான குரு நாதர் பற்றி நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.

சாதாரண சந்தோஷாக அறிமுகமான என்னை இன்றி சாண்டி மாஸ்டராக மாற்றியது கலா மாஸ்டர் தான். அவர் தான் என் குரு நாதா என நிகழ்ச்சியில் கூறியது மட்டுமின்றி நேரடியாக சென்று நேற்றைய தினம் ஆசிர்வாதமும் வாங்கியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது..!