" "" "

பிக் பாஸ் வெற்றிக் கொண்டாட்டம் ஷூட்டிங் முடிந்தது.!! இம்முறையும் போட்டியாளர்களை வைத்து செய்துள்ள சாண்டி மாஸ்டர்.!!

பிக் பாஸ் சீசன் 4 முடிவடைந்த நிலையில் வெற்றிக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது பிரபல தொலைக்காட்சி. 18 பேருடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் அனைவரும் வெளியேற்றப் பட்டு 5 பேர் பைனல் வந்தார்கள். முறையே 5,4, 3 இடங்களை சோம், ரம்யா, ரியோ பிடிக்க 2ம் இடத்தை பாலாஜி முருகதாஸ் பெற்றுக் கொண்டார்.

சீசன் 4ல் டைட்டிலை ஆரி பெற்றுக் கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் வெற்றிக் கொண்டாட்டம் வைப்பது வழமை அதே போல் இம்முறையையும் ஏற்பாடு செய்யப் பட்டு சூட்டிங் முடிவுக்கு வந்துள்ளது. போட்டியாளர்களில் கேபி, அர்ச்சனா, சம்யுக்தா, ஆகியோரின் சிறப்பு நடனங்கள் உள்ளது, அத்துடன், பாலாஜி,ஆஜித்தின் சிறப்பு நிகழ்வுகளும் உள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ரசிகர்கள் எதிர்பார்த்த சாண்டி மாஸ்டரின் நடனமும் உள்ளது. பிக் பாஸ் வெற்றிக் கொண்டாட்டம் என்றால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒரே விடயம் சாண்டி மாஸ்டரின் நடனம் தான், இம்முறையும் கலக்கி உள்ளார். சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் எப்போது ஒளிபரப்பு செய்யப் படும் என்பதை தொலைகாட்சியே முடிவு செய்யும்,

எப்போது ஒளிபரப்பு செய்தாலும் பரவாயில்லை, குக் வித் கோமாளி நிகழ்ச்சி நேரத்தில் மட்டும் போட்டு விடாதீர்கள் என்பது தான் எமது ஆசை.!!