" "" "

விஜய் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் இடையே வெடித்த சண்டைக்கு விஜயின் மனைவி சங்கீதாவின் இந்த செயல் தான் காரணமா.? தந்தை மகனை பிரித்தது சங்கீதாவா.? வெளியான அதிர்ச்சி தகவல்.!

கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் பேசப்படும் விடயங்களில் மிக முக்கியமானதாக கருதப் படுவது விஜய் மற்றும் அவரது தந்தை இயக்குனர் சந்திரசேகர் இருவரிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு தான். நடிகர் விஜயை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப் படுத்திய காலத்தில் இயக்குனர் சந்திரசேகர் அவர்களால் உருவாக்கப் பட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அண்மையில் சந்திரசேகர் அரசியல் கட்சியாக்கினார்.

விஜய் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ரசிகர்கள் இதை நம்பி கட்சியில் இணைய வேண்டாம் என்றும் அறிக்கை விட்டார். இதனால் குடும்பத்திற்குள் பூகம்பம் இருப்பது மீடியாக்களுக்கு தெரியவந்தது. இந்த பிரச்சனை பற்றி பேசி இருந்த விஜயின் தாய், விஜய்க்கு அரசியல் பற்றி பேசிக்கொண்டிருப்பது பிடிக்காது,

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பலமுறை தந்தையிடம் கூறியும் கேட்காததால் தந்தை மகன் இருவரும் பேசிக்கொள்வதில்லை என்று தெரிவித்த்தார். இந்த நிலையில் தற்போது விஜய் மற்றும் அவரது தந்தை மோதலுக்கு முக்கிய காரணம் சங்கீதா என கூறப்படுகின்றது. விஜயின் மனைவியான சங்கீதா எந்த முடிவை எடுத்தாலும் தெளிவாக எடுப்பார் என்ற நம்பிக்கை நடிகர் விஜய்க்கு உண்டு.

அதனால் பல விடயங்களை தனது மனைவியுடன் பேசிய பின்பே முடிவு செய்வாராம். அரசியல் பேச்சு பற்றியும் ஆரம்பத்திலேயே சங்கீதாவிடம் விஜய் கேட்ட போது பிள்ளைகளின் படிப்பு முடியட்டும், அத்துடன் இப்போதைக்கு அரசியல் வேண்டாம் என விஜயிடம் கூறினாராம். சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்க இருக்கிறது என சங்கீதா கூற இதில் நியாயம் இருப்பதால் அரசியல் இப்போதைக்கு வேண்டாம் என விஜய் தந்தையிடம் கூறியுள்ளார்.

இதனால் மனைவியின் பேச்சை கேட்பதாக சந்திரசேகர் குற்றம் சுமத்த விஜய் உச்சக்கட்ட கோபத்திற்கு சென்று தான் அறிக்கை விட்டுள்ளார். இதனால் விஜய் சந்திரசேகர் பிரிவுக்கு சங்கீதாவே காரணம் என கூறப்படுகின்றது.