சிறைத்தண்டணை விதிக்கப்பட்ட எம்.பிக்கு பிணை!

3 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. சரண குணவர்த்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவின் பிரகாரமே இந்தப் பிணை வழங்கப்பட்டள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

(செய்தியின் பின்னணி)

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையில் ஊழலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சரண குணவர்த்தன, தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணிபுரிந்த காலத்தில் (2005- 2006) வாகனக் கொள்வனவு செய்தமை தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணையின்போதே சரண குணவர்தனவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் மேற்படி தண்டனையை விதித்துள்ளது.